தாய்மொழியைக் கொண்டாடுவோம்.. மொழி ஒரு அறிவியல் பார்வை!

Feb 21, 2026,10:24 AM IST

தி.மீரா


மொழி என்றால் என்ன?


மொழி என்பது மனிதர்கள் தங்கள் எண்ணங்கள், உணர்வுகள், அறிவு, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தும் ஒரு தொடர்பு முறை. அது மூன்று வகையில் வெளிப்படுகிறது:


பேச்சு மொழி – நாம் பேசுவது

எழுத்து மொழி – நாம் எழுதுவது

சைகை மொழி – கை, முகபாவம் மூலம் தெரிவிப்பது


மொழி இல்லாமல் மனித சமூகம் வளர முடியாது. அறிவு பரிமாற்றம், கலாச்சாரம், மரபு — இவை அனைத்துக்கும் மொழி அடிப்படை.




எப்படி இத்தனை மொழிகள் பிறந்தன?


பழைய காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குழுக்களாக உலகம் முழுவதும் குடியேறினர். அவர்கள், வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தனர், வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்தனர், ஒருவருடன் ஒருவர் தொடர்பு குறைந்தது


இதனால்: சொற்கள் மாறின, உச்சரிப்பு மாறின, இலக்கணம் மாறின


பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஒரே மூல மொழியிலிருந்து பல தனித்தனி மொழிகள் உருவானது. உதாரணம்:


லத்தீன் மொழியிலிருந்து → ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலியன்

சமஸ்கிருதத்திலிருந்து → ஹிந்தி, பெங்காலி போன்ற மொழிகள்.. இதை மொழி பரிணாமம் (Language Evolution) என்பார்கள்.


தாய்மொழி என்று எதை கூறுகிறோம்?


ஒரு குழந்தை பிறந்தவுடன் வீட்டில் முதலில் கற்றுக் கொள்ளும் மொழியே தாய்மொழி.


அதாவது: தாய் பேசும் மொழி, வீட்டில் பேசப்படும் மொழி, இயல்பாக மனதில் பதியும் மொழி 


தாய்மொழி: சிந்தனையை உருவாக்குகிறது, அடையாளத்தை அளிக்கிறது, கலாச்சாரத்தை பாதுகாக்கிறது. 

எடுத்துக்காட்டாக, தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவருக்கு தமிழ் தாய்மொழி.


எது ஆதி மொழி?


இது மிகவும் சிக்கலான கேள்வி. உலகில் மனிதர்கள் முதலில் பேசிய மொழி என்ன என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. ஆனால் விஞ்ஞானிகள் கூறுவது: மனிதர்கள் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினர், அதனால் ஆரம்ப மொழி அங்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அந்த மொழி இன்று இல்லை


முக்கிய உண்மை:


இன்றும் வாழும் எந்த மொழியையும் “முழுமையான ஆதி மொழி” என்று நிரூபிக்க முடியாது.


சிலர்:


தமிழ் ஆதி மொழி என்று கூறுவர், சிலர் சமஸ்கிருதம் என்று கூறுவர், சிலர் ஹீப்ரு என்று கூறுவர். ஆனால் அறிவியல் ரீதியாக, எல்லா மொழிகளும் பரிணாம வளர்ச்சியின் விளைவுகள் தான்.


மொழி என்பது மனித சமூகவின் உயிர். மொழிகள் காலப்போக்கில் மாறிக் கொண்டே இருக்கும். தாய்மொழி என்பது நம் அடையாளத்தின் அடித்தளம். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன (7000க்கும் மேல்). ஒவ்வொரு மொழியும் ஒரு கலாச்சார செல்வம். 


“மொழிகளின் தாய்மொழியே வாழ்க தமிழ்” என்று நாம் பெருமையாக சொல்லலாம். ஆனால் அதே நேரத்தில் மற்ற மொழிகளையும் மதிப்பது மனிதநேயத்தின் அடையாளம.


தாய்மொழிக் கல்வியின் பயன்கள்


தாய் மொழியில் கல்வி பெறுவது ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளம் ஆகும். அது அறிவு வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.


குழந்தை வீட்டில் பேசும் மொழியே பள்ளியிலும் பயன்படுத்தப்பட்டால், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். பயம் குறையும், ஆர்வம் அதிகரிக்கும். 


மனதில் முதலில் உருவாகும் சிந்தனை தாய்மொழியில்தான் இருக்கும். தாய்மொழியில் கற்றால் ஆழ்ந்த சிந்தனை, பகுத்தறிவு, கேள்வி கேட்கும் திறன் வளர்கிறது. புதிய மொழியில் கற்றால் சில நேரங்களில் தயக்கம் ஏற்படும். ஆனால் தாய்மொழியில் கற்றால் குழந்தை தன்னம்பிக்கையுடன் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்கிறது.


தாய்மொழி என்பது ஒரு இனத்தின் மரபு, பண்பு, பண்பாட்டு செல்வம். அதில் கல்வி பெறுவதால் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. தாய்மொழி மனதுடன் இணைந்தது. அதில் கற்ற கல்வி மனதில் நீண்டநாள் நிலைத்து நிற்கும்.


ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், ஆரம்ப கல்வி தாய்மொழியில் இருந்தால் மற்ற மொழிகளையும் பின்னர் எளிதாக கற்றுக்கொள்ள முடியும். தாய்மொழிக் கல்வி சமத்துவத்தை உருவாக்குகிறது. எல்லா குழந்தைகளும் சம வாய்ப்புடன் கற்க முடிகிறது.


“தாய் மொழி என்பது அறிவின் முதல் வாசல்.” அதில் கற்ற கல்வி வாழ்நாள் முழவதும் வழிகாட்டியாக விளங்கும்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

யார் தமிழன்?

news

தாய்மொழியைக் கொண்டாடுவோம்.. வங்கத்திலிருந்து கிளம்பிய மொழிப் பொறி!

news

சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!

news

தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு!

news

தாய்மொழியைக் கொண்டாடுவோம்.. மொழி ஒரு அறிவியல் பார்வை!

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

news

அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்