PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

Aug 28, 2025,06:24 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்த பயணம் உதவும் என்று நம்பப்படுகிறது.


ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பை ஏற்று, 15வது இந்தியா-ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 


குஜராத்தில் உள்ள இரும்பு ஆலைகள், கிராமப்புற இந்தியாவில் உள்ள உயிரி எரிவாயு திட்டங்கள், வடகிழக்கிற்கான நுழைவாயிலாக அசாம், டோக்கியோவில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் என இந்தியா-ஜப்பான் கூட்டணி பல துறைகளில் விரிவடைந்து வருகிறது. இந்திய கிராமங்களில் உள்ள விவசாயிகளும், பெங்களூரு மற்றும் டோக்கியோவில் உள்ள AI (செயற்கை நுண்ணறிவு) பொறியாளர்களும் இந்த ஒத்துழைப்பில் பங்கு கொள்கிறார்கள். 




செமி கண்டக்டர் தொழிற்சாலைகள், கல்வி பரிமாற்றங்கள் மற்றும் இரண்டு ஆண்டுகளில் கையெழுத்தான 170-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், இரண்டு நாடுகளும் புதிய ஒத்துழைப்புக்கு பாலம் அமைத்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் சுமார் $13 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயணம் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


டிரம்ப் விதித்த வரிகள் காரணமாக QUAD அமைப்பின் ஒற்றுமை குறித்து விவாதிக்கப்படலாம். அமெரிக்காவுடனான உறவு மோசமடைந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமருடன் QUAD குறித்து பிரதமர் மோடி விவாதிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. நிப்பான் ஸ்டீல் (AM/NS இந்தியா) குஜராத்தில் ரூ.15 பில்லியன் முதலீடு செய்துள்ளது. மேலும் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.56 பில்லியன் மதிப்பிலான ஒருங்கிணைந்த எஃகு ஆலையை அமைத்துள்ளது. சுசூகி மோட்டார் குஜராத்தில் புதிய ஆலைக்காக ரூ.350 பில்லியன் முதலீடு செய்துள்ளது. மேலும் உற்பத்தி விரிவாக்கத்திற்காக ரூ.32 பில்லியன் முதலீடு செய்துள்ளது. 


டொயோட்டா கிர்லோஸ்கர் கர்நாடகாவில் ரூ.33 பில்லியன் விரிவாக்க திட்டங்களையும், மகாராஷ்டிராவில் ரூ.200 பில்லியன் புதிய ஆலையையும் அமைக்க உள்ளது. சுமிட்டோமோ ரியாலிட்டி ரியல் எஸ்டேட்டில் $4.76 பில்லியன் முதலீடு செய்துள்ளது. JFE ஸ்டீல் மின்சார எஃகு உற்பத்தியை வலுப்படுத்த ரூ.445 பில்லியன் முதலீடு செய்துள்ளது.


இந்த ஒத்துழைப்பு விண்வெளி வரை விரிவடைந்துள்ளது. ISROவின் PSLV ராக்கெட்டை பயன்படுத்தி Astroscale நிறுவனம் தனது செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.  ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கூறுகையில், இருதரப்பு அளவில், எங்களுக்கு நல்ல அரசியல் உறவு உள்ளது. எங்கள் பொருளாதார உறவு பல ஆண்டுகளாக எவ்வாறு மாறி இருக்கிறது என்பதை பார்த்திருக்கிறோம். இந்த ஆண்டு இந்தியா-ஜப்பான் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பரிமாற்ற ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே நாங்கள் ஒவ்வொரு அம்சத்திலும் பணியாற்றி வருகிறோம் என்றார். மேலும் இந்த பயணம் உறவுகளை மதிப்பிடுவதற்கான ஒரு வழி என்றும் அவர் கூறினார். இன்னும் நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

news

மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?

news

PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

news

மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!

news

மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

news

இறக்குமதி வரியால் பாதிப்படைந்தவர்களுக்கு வாராக்கடன் விதிகளை தளர்த்த வேண்டும் : எம்.பி.சு வெங்கடேசன்

news

uncle என விஜய் சொன்னது...டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன பதில்

news

புற்றுநோய் சுற்றுலாவால் ஹிமாச்சல் பிரதேசம் பாதிப்பு.. இப்படியே போனால்.. நிபுணர்கள் எச்சரிக்கை

news

2038ல் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. எர்னஸ்ட் அன்ட் யங் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்