சென்னை: ஜன.23ஆம் தேதி மதுரையில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் மோடியின் மதுரை பொதுக்கூட்டம் திடீர் என சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மதுரைபாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 23ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பாரத ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், திடீரென இந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. அதன்பின்னர் காவல் துறைக்கு இது சம்பந்தமாக அனுமதிகோரி மனு அளிக்க இருப்பதாகவும் பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்...ஏற்பாடுகள் தயார்
பிரதமர் மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தொடர் உயர்வில் தங்கம் வெள்ளி விலை... இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா?
பிளாக் டீ Vs க்ரீன் டீ... ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கலுக்குப் பின் விஜய்யிடம் விசாரணை...ஜன.,19ல் மீண்டும் அழைக்கப்பட வாய்ப்பு
அண்ணாமலை பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. மகாராஷ்டிரா முதல்வர்
{{comments.comment}}