ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. 10 வருடங்களு்குப் பிறகு கனடா பயணம்

Jun 17, 2025,10:39 AM IST

டெரன்டோ : பிரதமர் மோடி G7 மாநாட்டில் கலந்து கொள்ள கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பத்து வருடங்களுக்கு பிறகு அவர் கனடாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் உலக தலைவர்களுடன் முக்கியமான விஷயங்கள் பற்றி பேசவுள்ளார்.


குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை  கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்கவுள்ளார். பிரதமர் மோடியின் 3 நாடு சுற்றுப்பயணத்தில் முதலில் சைப்ரஸ் சென்றிருந்தார். தற்போது 2வது நாடாக கனடா பயணப்பட்டுள்ளார்.


ஜூன் 16-17 தேதிகளில் கனடாவில் Kananaskis என்ற இடத்தில் G7 மாநாடு நடக்கிறது. இது பிரதமர் மோடி பங்கேற்கும் 6வது G7 மாநாடு ஆகும். கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்ததை அடுத்து, பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். G7 அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது கனடா G7 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. அதனால் மாநாட்டை நடத்துகிறது. 




முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே உறவு சரியில்லை. அதை சரி செய்ய புதிய கனடா அரசு விரும்புகிறது. அதனால்தான் கனடா தரப்பில் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


பிரதமர் மோடி கனடாவுக்கு செல்வது இதுவே முதல் முறை. இரு நாடுகளுக்கு இடையே உறவு மோசமான பிறகு அவர் அங்கு செல்கிறார். முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய உளவாளிகள் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதாக குற்றம் சாட்டினார். இதனால் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே உறவு மோசமானது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடாவில் இடம் கொடுப்பதே முக்கிய பிரச்சினை என்று இந்தியா கூறியுள்ளது.


G7 மாநாட்டின்போது பிரதமர் மோடி, கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியை சந்திக்கிறார். கார்னி, இந்தியாவுடன் உறவை "மீண்டும் கட்டியெழுப்ப" விரும்புவதாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது பற்றி கார்னி கூறுகையில், "இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மேலும், முக்கியமான விநியோக சங்கிலிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பற்றியும் அவர் பேசினார். "சட்ட அமலாக்கத்துறையினருடனான பேச்சுவார்த்தையை தொடர நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்" என்று அவர் கூறினார்.


பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துவிற்கு பிறகு பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரங்களை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்ல ஏழு குழுக்களை இந்தியா அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.


G7 மாநாடு என்பது உலகின் முக்கியமான நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்