திமுகவை குறை சொல்ல.. பிரதமர் மோடிக்குத் தகுதி இல்லை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Feb 29, 2024,07:23 PM IST

சென்னை: ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக்கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திமுகவை குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்து சென்றிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2 பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். திருநெல்வேலியில் அவர் பேசுகையில், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. திமுக தமிழ்நாட்டை சுரண்டுவது போல, காங்கிரஸ் இந்தியா கூட்டணியை அமைத்து நாட்டை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது.




ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுகவும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு  திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். குடும்ப அரசியல் தான் தலைதூக்கியுள்ளது என்றார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்


இதற்கு பதில் கூறும் விதத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:


இந்தியாவை ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயக போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும். தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வர தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்த கோபத்தை தான் அவரது முகம் காட்டுகிறது. திமுகவை பற்றியும் கழக அரசை பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார். பிரதமர் அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடைபோடுகிறோமாம். எந்த திட்டங்களை கொண்டு வந்தார். எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம். இன்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். 




எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி திறப்பதற்கு தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தடையாக இருந்தோமா? மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதை சொல்லட்டும். பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகிறார் பிரதமர். நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச்சாலையில் தடைகள் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம் உழவர்களை நிலத்தில் இருந்து விரட்டும் அது குடியுரிமை திருத்தச் சட்டமானது.


சிறுபான்மையினருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் எதிரானது எதை எதிர்க்கிறோமோ அதை வெளிப்படையாக சொல்லிவிட்டு தான் எதிர்க்கிறோம். ஆனால், ஒரு மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியை தராமல் கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து வெள்ள நிவாரணத்துக்கு கூட பணம் தராமல் இரக்கமற்ற ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடி அவர்களுக்கு திமுகவை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. திமுகவை ஒழித்து விடுவேன். இல்லாமல் ஆக்கி விடுவேன் என்று தான் வகிக்கும் பதவியை தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார். பிரதமர் திமுகவை அழிப்பேன்  என்று கிளப்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். 


எங்களின் தலைவர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயக கழகத்தில் நின்று ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படும் உரிமை பாஜகவுக்கு முன்பு கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பாஜக. வருங்காலத்தில் நல்ல எதிர்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன். பாஜக அரசின் வஞ்சக செயல்களை பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும் அவர்களுக்கு நினைவூட்டும் கடமை தான் நமக்கு உண்டு. 


தமிழ்நாட்டில் 40 நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக தொடங்கி விட்டதாக செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகளை பாஜக தொல்லை செய்து வருவதை பார்க்கும் போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்திய முழுமைக்கும் உறுதுணையாகவே உணர முடிகிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்