டெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப கட்டமைப்பு குறித்த ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் இந்தப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், கடந்த 20-ஆம் தேதி அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதே போல் பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போதுதான் அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கு வந்து அமெரிக்க அதிபரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நீண்ட நேரம் பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் உரையாடினார். அடுத்த மாதம் இந்திய பிரதமர் வெள்ளை மாளிகைக்கு வர இருக்கிறார் என தெரிவித்தார்.
அதே சமயத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா அமெரிக்கா இடையேயான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டவும் விரைவில் அமெரிக்க அதிபரை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரதமர் அமெரிக்காவிற்கு எப்போது செல்கிறார் ..எத்தனை நாட்கள் அங்கு இருக்கிறார்.. என்பது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே, சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கையை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது. கொலம்பியாவுடன் இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டு, தனது நாட்டு சட்டவிரோத குடியேறிகளை பாதுகாப்பான முறையில் திரும்ப அழைத்துக் கொள்ள கொலம்பியா முன்வந்துள்ளது. அடுத்து இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும் இதுபோன்ற பாதுகாப்பான வெளியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் எது சரியோ அதை இந்தியா செய்யும் என்று ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}