சென்னை: தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
தம்பி கபிலன் வைரமுத்து
ஆகோள் நாவலின்
இரண்டாம் பாகம்
எழுதியிருக்கிறார்
‘மாக்கியவெல்லி காப்பியம்’
என்று பெயர் சூட்டியிருக்கிறார்
நாவலைத்
தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்
டிஸ்கவரி
வேடியப்பனுக்கு நன்றி
‘அண்மையில் இஸ்ரேல்
இணையவெளியில் மேற்கொண்ட
முக்கிய முன்னெடுப்புதான்
இந்த நாவலுக்கு மூலம்’
என்றார் கபிலன்
யாரும்
வேட்டையாடாத காடுகளில்
வேலோடு நுழைகிறார்
‘இனி
எழுத்து எழுத்தாக மட்டுமே
வெற்றி பெறுவது
அத்துணை எளிதல்ல மகனே!
தொழில்நுட்பத்தோடு இயங்கி
ஒரு கூட்டுமதிப்பு
அடைகிறபோதுதான்
எழுத்துக்குச் சரியான
சந்தை கிடைக்கும்’ என்றேன்;
புரிந்துகொண்டார்
நேர்மையான ஒழுக்கமான
சலிக்காத உழைப்பு
மகன்மீது எனக்கு
மரியாதை கூட்டுகிறது
விரைவாய் நிறைவாய்
வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!
பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்
திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
{{comments.comment}}