சென்னை: நடித்து நடித்துச் சிரிக்க வைத்தவர்; கொடுத்துக் கொடுத்தே ஏழையானவர் கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணிலில்லை; மனசில் என்று மறைந்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வீடு பாழடைந்து போய்க் கிடப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தவர். தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும் இருந்தவர். நகைச்சுவையில் பல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை புகுத்தி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாள்வதில் தனித்திறன் படைத்தவர். இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர்.
இவரது பாணியைத்தான் பின்னாளில் நடிகர் விவேக் பின்பற்றி பல சமூகக் கருத்துக்களை தனது படங்களில் இடம் பெற வைத்தார். சின்னக் கலைவாணர் என்ற பெயரையும் பெற்றார். அத்தகைய பெருமைக்குரிய கலைவாணர் இல்லத்தை நேரில் சென்று பார்த்து விட்டு கவிஞர் வைரமுத்து தன எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
கன்னியாகுமரி சென்று
வரும்வழியில்
என் நீண்டநாள்
ஆசையொன்றை
நிறைவேற்றிக்கொண்டேன்
நாகர்கோயிலுக்குள் புகுந்து
ஒழுகினசேரி எங்கே
என்று விசாரித்தேன்
அங்கு வந்ததும்
கலைவாணர் வீடு எங்கே
என்று வினவினேன்
நான் காணவிரும்பிய
கலைவாணர் வீடு
கலைந்த கூடுபோல்
சிதைந்து கிடந்தது
1941இல் கட்டப்பட்டு
‘மதுரபவனம்’ என்று
பெயரிடப்பட்ட மாளிகை
ஓர் உயரமான நோயாளியாக
உருமாறிக் கிடந்தது
இந்த மண்ணின்
பெருங்கலைஞர் கலைவாணர்
நடித்து நடித்துச்
சிரிக்க வைத்தவர்;
கொடுத்துக் கொடுத்தே
ஏழையானவர்
அந்த வளாகத்தில்
ஒரு நூற்றாண்டு நினைவுகள்
ஓடிக் கடந்தன
எத்துணை பெரிய
கனவின் மீதும்
காலம் ஒருநாள்
கல்லெறிகிறது
கலைஞர்களின்
நிஜமான நினைவிடம் என்பது
மண்ணிலில்லை;
மனசில் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}