சென்னை: தமிழகம் முழுவதும், ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு மருந்துவ முகாம் வருகின்ற மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது தான் போலியோ தடுப்பு முகாம். தமிழக அரசு சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை இந்த முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதனால் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது.
கடந்த 4 ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளின் மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனை சாவடிகளில் நடமாடும் வாகனம் மூலம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் பங்கேற்று தங்களது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாது போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் படி பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}