மகிழ்ச்சியான செய்தி.. என்ன மக்களே ஊருக்குப் போலாமா.. நாளை முதல்  பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

Jan 11, 2024,06:15 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


நாளை தொடங்கி 14ம் தேதி முதல் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். நாளை முதல் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல மொத்தம் 19 ஆயிரத்து 484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்கு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பொங்கலுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க ஏதுவாக சிறப்பு  பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த சில வருடங்களாக பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைன் வாயிலாக  புக்கிங்  செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்த மக்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சொல்ல ஏதுவாக கூடுதலான சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்துள்ளது.


நாளை முதல் தமிழகம் முழுவதும் மொத்தம் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் மாதவரம், கே.கே நகர், பூந்தமல்லி, கோயம்பேடு, கிளாம்பாக்கம் போன்ற போன்ற பஸ் நிலையங்களிலிருந்து புறப்பட்டுச் செல்லும். சென்னையில் இருந்து தினசரி 2100 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கூடுதலாக  நாளை முதல் 4,706 சிறப்பு பேருந்துகள் வீதம் மூன்று நாட்களுக்கு மொத்தம் 10,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.


கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, சிதம்பரம் ,கடலூர் செல்லும் பேருந்துகள் கே.கே நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும்,ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும், காஞ்சிபுரம், ஆரணி, வேலூர், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பேருந்து நிலையத்தில் இருந்தும் செல்லும்.


திருத்தணி, திருப்பதி, ஆரணி, ஆற்காடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், விழுப்புரம், கோவை, சேலம், புதுக்கோட்டை, மதுரை திண்டுக்கல், நெல்லை வரை செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும்.


தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் புறப்பட உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில்.. தொடரும் கனமழை.. மேட்டூருக்கு 1 லட்சம் கன அடி வரை நீர் வர வாய்ப்பு!

news

தமிழ்நாட்டிற்கு இன்று எல்லோ அலர்ட்.. கன மழைக்கு வாய்ப்பு‌.. குடை must!

news

ஆடி தள்ளுபடி.. பொருளுக்குதான்.. சிரிக்கிறதுக்கு இல்லை.. வாங்க, வந்து நல்லா கலகலன்னு சிரிங்க!

news

வங்கதேசத்தில் பெரும் கலவரம்.. போர்க்களமாக மாறிய நகரங்கள்.. 100க்கும் மேற்பட்டோர் பலி.. ஊரடங்கு!

news

இலங்கை டூருக்கான இந்திய அணி தேர்வு.. ரசிகர்கள் குழப்பம் + ஷாக்.. கெளதம் கம்பீர் கையில் டேட்டா!

news

ஜூலை 20 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்

news

இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அன்பு, பாசம் கிடைக்க போகிறது?

news

ஆம்ஸ்ட்ராங் கொலை.. தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு அஞ்சலை.. ஓட்டேரியில் கைது!

news

அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்த ரூ 21 கோடி.. ஆய்வுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்