சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக பொன்முடி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். அவர் ஆபாசமாக பேசியது தொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பொன்முடியின் இந்த பேச்சிற்கு எம்.பி. கனிமொழியும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டும் இன்றி, இதற்கு முன்னர் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ஓசி டிக்கெட் என்று கூறி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கழக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி அவர்கள், அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து புதிய துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமித்து திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}