சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் "கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள்" என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இந்த விவகாரத்தில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன் மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் இந்த கடத்தல் வழக்கிற்கும், ஜெகன் மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பூவை ஜெகன் மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபி ஜெயராமனின் காரில் திரும்பக் கொண்டு வந்து விடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். எனவே இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபிக்கும் உள்ள தொடர்பு குறித்து பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து 7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக பிற்பகல் ஆஜராகும்படி பூவை ஜெகன் மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமனுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். இதை அடுத்து இந்த வழக்கில் ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை. கட்டப்பஞ்சாயத்து செய்ய தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்களா என பூவை ஜெகன் மூர்த்தியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும். ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்க நீதிபதி வேல்முருகன் ஆணையிட்டார்.
மேலும் சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 26க்கு தள்ளிவைத்த நீதிபதி, விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் என்றும் முழு ஒத்துழைப்பு தருமாறும் பூவை ஜெகன் மூர்த்திக்கும் உத்தரவிட்டுள்ளார்.
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}