சென்னை: ஒரு காலத்தில் சினிமாவைக் கலக்கியவர் பவர் ஸ்டார் சீனிவாசன். பெரிய பெரிய நடிகர்களுக்கே டப் கொடுக்கப் போகிறார் என்று கூறப்பட்டவர். பிறகு அப்படியே அந்த பரபரப்பு அமிழ்ந்து போய் விட்டது. பெரும் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் இறங்குகிறார் பவர் ஸ்டார்.
அவரது நடிப்பில் உருவான முன்தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், என பல பரிமாணங்களில் வலம் வருபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவரை ரசிகர்கள் செல்லமாக பவர்ஸ்டார் என்ற புனைப் பெயரால் அழைத்து வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். நடிகராவதற்கு முன்னர் லத்திகா என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

லத்திகா படம்தான் இவருக்கு சினிமாவில் மிகப் பெரிய விசிட்டிங் கார்டாக இருந்தது. தொடர்ந்து புழுதி, ஜெயிக்கிற குதிர, முருங்கைக்காய், பிக்கப் ராப், நாங்க ரொம்ப பிசி, உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் இடையில் கேப் விழுந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது முன்தினம் என்ற படத்தில் கதாநாயகனாக கமிட்டாகி உள்ளார் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவருடன் இயக்குனர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ் மற்றும் ராம் ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும், மற்றும் யுவராஜ் ஷமிதா, சாவித்திரி, நெல்லைப் பெருமாள், சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் லோகநாதன் என்பவர் எல் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். ஜீவா வர்ஷினி இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் முன்பினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட்டனர். இதனை பவர் ஸ்டார் பெற்றுக் கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
{{comments.comment}}