இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்‌.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!

May 23, 2025,05:08 PM IST
சென்னை: இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும். கடற்கரை பகுதிகள் மலைத் தொடர்கள், அணைகள், நீர்பிடிப்பு பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


அரபிக் கடல் பகுதிகளில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது தெற்கு கொங்கன் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிக்கு அப்பால் மத்திய கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





இந்த நிலையில்  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்‌.இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சீக்கிரமாகவே தொடங்கும். இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும். வால்பாறை, நீலகிரி (கூடலூர்) பகுதிகள் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கேரளா, காவிரி நீர்ப்பிடிப்பு, சிறுவாணி நீர்ப்பிடிப்பு, பெரியாறு நீர்ப்பிடிப்பு, பரம்பிக்குளம் நீர்ப்பிடிப்பு, கேரள கடற்கரை மற்றும் மலைத்தொடர்கள், கோவா, மகாராஷ்டிரா கடலோர மற்றும் மலைத்தொடர் பகுதிகள், மும்பை ஆகிய பகுதிகளுக்கு அடுத்த 10 நாட்களுக்கு மழை  காத்திருக்கின்றன என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்