- அ.சீ.லாவண்யா
வேலூர்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாளை (டிசம்பர் 17) தமிழகம் வருகை தர உள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொற்கோவிலில் அவர் வழிபாடு மேற்கொள்ள உள்ளார்.
இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. முக்கியமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும் மற்றும் ஸ்ரீபுரம் கோவிலின் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
காவலர்கள், சிறப்பு பாதுகாப்புப் படைகள் மற்றும் கண்காணிப்பு போன்ற தீவிர பாதுகாப்பு படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழுக்கள் அமைக்கபட்டுள்ளன.

முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கிசி டிவி கேமராகள் பொருத்தப்பட்டும் மற்றும் கண்காணிப்பும் அதிகளவில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் செய்து வருகின்றன.
பொற்கோவில் வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் நுழைவுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் வருகை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}