டெல்லி: 3 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி நேற்று தனது 74வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். அவரது பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பனர்கள், திரைநட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், நாட்டு மக்கள் என அனைத்து தரப்பனர்களும் தத்தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாள் பயணமாக அமெரிக்க செல்கிறார் பிரதமர் மோடி. அமெரிக்காவில் நடக்கும் குவாட் கூட்டமைப்பின் 4வது மாநாடு மற்றும் ஐ.நா பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அத்துடன் செப்., 22ம் தேதி அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க திட்ட பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்துகிறார். இந்தியா, அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த குவாட் கூட்டமைப்பில் இந்தோ பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு உதவி செய்வது உள்ளிட்ட அஜெண்டா, இலக்குகள் ஆகியவை திட்டமிடப்பட உள்ளன.
குவாட் கூட்டமைப்பின் அடுத்தக் கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 22ம் தேதி இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். செப்டம்பர் 23ம் தேதி பிரதமர் மோடி ஐநா சபையில் உரையாற்றுகிறார். மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் சந்தித்து அவர்களுடனும் உரையாற்றுகிறார். ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி கண்டக்டர், உள்பட அதி நவீன தொழில் நுட்பத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}