"இது ரொம்ப ஸ்பெஷல்".. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சூப்பர் செல்ஃபி!

Apr 09, 2023,10:15 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய சென்னை பயணத்தின் நிறைவாக எடுத்த ஒரு செல்ஃபி பலரையும் நெகிழ வைத்து விட்டது.

செல்ஃபி எடுப்பது என்பது பலருக்கும் ஹாபியாகி விட்டது. எதற்கெடுத்தாலும் செல்ஃபி.. எந்த இடத்தில் இருந்தாலும் செல்ஃபி.. எப்போது பார்த்தாலும் செல்ஃபி என்று நிலைமை மாறிப் போய் விட்டது.  இப்படிப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ஒரு செல்ஃபி அனைவரையும் உருக வைத்துள்ளது. 



பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி எடுப்பது புதிதல்ல. இதற்கு முன்பும் கூட நிறைய செல்ஃபி எடுத்துள்ளார். விதம் விதமான மனிதர்கள், தலைவர்களுடன் அவர் நிறைய செல்ஃபி எடுத்துள்ளார். ஆனால் நேற்று எடுத்தது விசேஷமாகி விட்டது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிற்பகல் சென்னை வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இரவு அவர் கிளம்பிச் சென்றார். தனது சென்னை பயணத்தின் நிறைவாக அவர் ஒரு வித்தியாசமான பாஜக தொண்டரைச் சந்தித்தார். விமான நிலையத்திற்கு வந்திருந்த அந்த பாஜக தொண்டரின் பெயர் மணிகண்டன். சக்கர நாற்காலியில் வந்திருந்த மணிகண்டன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.

தீவிர பாஜக தொண்டரான அவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். கடை வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதியில் பூத் கமிட்டி தலைவராக இருக்கிறார். தனது கடையில் வரும் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து கட்சிக்காக செலவழிப்பாராம் மணிகண்டன். இப்படிப்பட்ட தொண்டரைச் சந்திப்பது பெருமையாக இருப்பதாக பின்னர் தனது டிவீட்டில் கூறியிருந்தார் பிரதமர் மோடி.




பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டிருந்த அந்த டிவீட்டில், ஒரு சிறப்பு செல்ஃபி... சென்னையில் எஸ்.மணிகண்டனை சந்தித்தேன்.  அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க பாஜக  கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் - அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்.

எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.  அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது.  அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

சக்கர நாற்காலில் அமர்ந்திருந்த மணிகண்டன் அருகில் குணிந்து நின்று பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக எடுத்துக் கொண்ட அந்த செல்ஃபியை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்