டெல்லி: யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறக் கோரி திமுக மாணவர் அணி சார்பில் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் யுஜிசி பல்கலைக்கழகம், துணைவேந்தர் நியமனம், ஆசிரியர் நியமனம், மற்றும் உயர் கல்வியின் தரத்தை பராமரித்தல் போன்றவைக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது. யுஜிசியின் இந்த புதிய வரைவு அறிக்கை கல்வியில் மாநில உரிமைகளை நிராகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழகம்,கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே சமயத்தில் இந்த புதிய வரைவு அறிக்கையை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதில் யூஜிசி வரைவு கொள்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவரணியின் சார்பில் 6.02.2025 அன்று திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே இந்த புதிய விதிமுறைகள் மாநில உரிமைகளை நிராகரிப்பது மட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குறியாக்குகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.அதே போல் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநில உரிமைகளை பறித்து வருகிறது எனவும் திமுக மாணவரணி தலைவர் எழிலரசன் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறக் கோரி இன்று டெல்லியில் ஜந்தர் மந்திரில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாணவரணி தலைவர் எழிலரசன் தலைமையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல இந்தியா கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்
ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!
வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது
முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி.. அனைத்து விலைகளும் உயரும் அபாயம்!
வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்
அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்
ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}