- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: வாழ்க்கையில் எல்லாமே நமக்குக் கட்டுப்படுபவை அல்ல.. சில இயற்கைக்கு மட்டுமே கட்டுப்படும். அதைத்தான் அந்தக் காலத்தில் பெரியவர்கள் பழமொழி, விடுகதை மூலமாக நமக்குச் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர்.
இவை எல்லாம் விளையாட்டுக்காக மட்டும் சொல்லித் தரப்படவில்லை. மாறாக இதன் மூலமாக நமது வாழ்க்கைக்குத் தேவையான சூட்சமங்களையும் மூத்தோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
அளவோடு சாப்பிட்டால் உடல் நலனுக்கு நல்லது. ஆனால் அதை நேரடியாக சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதால்தான் விரதம் இருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லி வைத்துள்ளனர். விரதம் இருந்தால் நமது உடலில் தேங்கும் கழிவுகள் வெளியேறும், உடல் உறுப்புகள் பலப்படும். இதன் மூலம் ஆயுளும் கூடும். இதைத்தான் பழமொழி வாயிலாகச் சொல்லிவைத்துள்ளனர் பெரியவர்கள்.
இன்று 2 பழமொழி பற்றிப் பார்ப்போமா
1. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்
பொருள் - இதற்காகத் தான் நாம் விரதம் இருக்கும் பழக்கம் நம்மிடையே கடைபிடிக்கப்படுகிறது. ஏகாதசி அன்று பெருமாளுக்கும், சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை வரும் என்பதால் சஷ்டி திதி, செவ்வாய், வியாழக்கிழமைகள் முருகனை நினைத்து விரதம் இருக்கிறோம்.
கார்த்திகை மாதத்தில் சபரிமலை செல்பவர்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்கின்றனர். பெண்கள் கடைபிடிக்கும் வரலக்ஷ்மி விரதம், பெளர்ணமி விரதம், அமாவாசை விரதம் என குடும்ப நலனுக்காக இருக்கும் விரதங்கள் பல. இவை தான் நம் ஆயுளைக் கூட்டும் எல்லா பழக்கத்திற்கும் ஒரு காரணம் வகுக்கப்பட்டது.
2. பருமன் குறைய முட்டை கோஸ்
பொருள் - வெள்ளை, பச்சை, ஊதா போன்ற நிறங்களில் வரும் முட்டை கோஸ் இலைக் காய்கறிகளில் அதிக நன்மை உடையது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கப் முட்டைகோசை வேக வைத்து சாப்பிடலாம். முட்டை கோஸ் கூட்டு, பொரியல், வெஜிடபிள் சாலட், முட்டைகோஸ் + வெஜிடபிள் சூப் பயன்படுத்தி உடல் பருமன் குறைவதை உணரலாம்.
என்னங்க.. இனிமே இதை கடைப்பிடிப்பீங்களா.. அடுத்த செய்தியில் மேலும் சில பழமொழிகளைப் பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}