- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: சுவர் இருந்தால்தான் டிராயிங் வரைய முடியும்.. அதாங்க சித்திரம்.. அப்படித்தான் நம்ம உடம்பும். உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்க்கையை வாழ முடியும்.
இதனால்தான் பெரியவர்கள் அந்தக் காலத்தில் பல நல்ல விஷயங்களைச் சொல்லிச் சென்றுள்ளனர். அதை நேரடியாக கூறினால் நாம் ஏற்க மாட்டோம் என்பதால்தான் குட்டிக் கதைகள், புராணக் கதைகள், விரதங்கள் என பல ரூபங்களில் இதைச் சொல்லி வைத்த்துள்ளனர்.
அதில் இரண்டு ஐட்டத்தை இப்போது பார்ப்போம்.
1. ஆயிலை குறைத்து ஆயுளைப் பெருக்கு

oil..oil..oil.. ஆமாங்க oilல் பொறித்த பண்டங்கள், ஸ்நாக்ஸ் ஐயிட்டம் இல்லாத வீடும் இல்லை, எந்த பண்டிகை மற்றும் கொண்டாட்ட நாளும் இல்லை. Deep fry items தான் குழந்தைகளுக்கும் ஏன் நமக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஆயிலில் செய்த பூரி, மசால் நினைத்தாலே பல பேருக்கு நாவில் எச்சில் ஊறும் இல்லையா? சாப்பிடலாம். ஆனால் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.
முடிந்தவரை காய்கறிகளை வேகவைத்து குழம்பிலும், வெஜிடபிள் சாலட், வெஜிடபிள் சூப் போன்று செய்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். அதே போல் இனிப்பான உணவுகள் சாப்பிடுவதும் பலருக்கும் பிடிக்கும். மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாட ஸ்வீட் சாப்பிடலாம். ஆனால் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதல்ல.
2. சீரகம் இல்லா உணவு சிறக்காது.
சீரகம்=சீர்+அகம். அகத்தை சீராக்கும். நம் உடலை சீராக வைத்துக் கொள்ள அதீத முக்கியமானது சீரகம். முதலில் தண்ணீரில் சீரகம் போட்டுக் குடிக்கலாம். ஜீரண சக்திக்குள், உடல் குளுமைக்கும் வழிவகுக்கும். தினமும் ரசம், சூப், குழம்பு, பொறியல், க6ட்டு சாம்பார் என அனைத்து உணவு வகைகளிலும் பயன்படுத்தலாம்.
1. சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது.2. இரத்த ஓட்டம் மேம்படும். அஜீரணம் மற்றும் வாயு போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கும். சைவம், அசைவம் உணவுகளில், மசாலா பொருட்களில் மிக முக்கிய பங்கு சீரகத்திற்கு உண்டு.
சீரகப் பொடியுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் வயிறு எரிச்சல் குணமாகும்.
என்னங்க கேட்டுக்கிட்டீங்களா.. பாலோ பண்ணுங்க.. ஹேப்பியா வாழுங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}