புதுச்சேரி: அதிமுக மீது உண்மையில் அக்கறையும் பாசமும் இருந்தால், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய அன்பழகன் இதுகுறித்துக் கூறுகையில், தமிழக பிஜேபி மற்றும் அதிமுக கூட்டணியை தினந்தோறும் விமர்சித்து பேசும் திருமாவளவனுக்கு அதிமுக மீது உண்மையில் பாசமும் அக்கறை இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து அவர் முதலில் வெளியேற வேண்டும் என்றார்.
காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதேபோன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஏன் ராகுல் காந்தி வலியுறுத்தவில்லை.
பெருந்தலைவர் காமராஜரின் எளிமையான வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா பேசியிருக்கிறார் மறைந்த தலைவர்களை பற்றி பேசுவது என்பது மிகுந்த கண்டனத்திற்குரியது ஏற்றுக் கொள்ளக்கூடாது.
பேரறிஞர் அண்ணாவை பாஜக விமர்சனம் செய்த போது உடனடியாக கூட்டணி இருந்து வெளியேறியது தான் அதிமுக. காமராஜர் பெயரை சொல்லி கட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சியினர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார்களா. காமராஜரை இழிவுபடுத்திய திமுகவினரை கண்டிக்க திராணி இல்லாதவர்கள் தான் காங்கிரஸார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவா காமராஜர் பற்றி பேசிய இழிவான செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.
GST reforms: புதிய ஜிஎஸ்டி.,யால் எவை எவை விலை குறையும்.. எது உயரும்.. பொருட்களின் முழு விபரம் !
ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கம்.. ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்.. புதிய வரிகள் செப்.,22 முதல் அமல்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
{{comments.comment}}