2 அமைச்சர்கள் டார்ச்சர் பண்றாங்க.. புதுச்சேரி எம்எல்ஏ சந்திர பிரியங்கா பரபரப்பு புகார்

Sep 01, 2025,11:51 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திர பிரியங்கா இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் செய்வதாக வீடியோ மூலமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி யூனியன் பிரதேசம் நெடுங்காடு- கோட்டுச்சேரி சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் சந்திர பிரியங்கா. மறைந்த புதுச்சேரி மூத்த தலைவர் சந்திரகாசுவின் மகள் ஆவார். அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஆளும் கட்சியான என். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சந்திர பிரியங்கா.


இந்த நிலையில் இவர் தற்போது ஒரு பரபரப்புப் புகார் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதன் சாராம்சம்:


அரசியலுக்கு வந்தப்பவே சொன்னாங்க




எல்லாருக்கும் வணக்கம். எப்பவும் நன்றி எல்லாம் சொல்ல தான் வீடியோ போடுவோம். Normal ஆ issue பேசுறது எல்லாம் வீடியோ போடுறது இல்ல. இருந்தாலும் ஒரு சில issue பேசலாம். அதுக்காக வீடியோ போடலாம். அதாவது பொதுவா அரசியலுக்கு வந்தப்போ நிறைய பேர் சொன்னாங்க. அவங்க வந்து அவங்க அப்பா அரசியல்ல இருந்தாங்க. So அதை வச்சு வந்தாங்க அப்படின்னு அப்போ அரசியல்ல இருந்தாங்க. அரசியல் பிடிச்சிருந்தது. அதனால அரசியலுக்கு வந்தோம். அதெல்லாம் தாண்டி மக்களுக்கு நம்மள பிடிக்கணும். அப்ப பிடிக்கிற மாதிரி ஏதோ ஒரு வேலை செய்யணும். அப்போ மட்டும் தான் மக்கள் ஏத்துப்பாங்க. So, யாராலயும் எந்த பின்புலத்தாலும் புதுச்சேரியை பொறுத்தவரைக்கும் உள்ள அரசியல் வர முடியாது. நாம ஒரு கட்சியில இருந்தோம். அந்த கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு இருந்தோம். அதனால வந்து நம்ம மக்களாலும் அங்கீகரிக்க பட்டோம். அப்படிங்கறதெல்லாம் வேற. 


எதுக்கு இந்த வீடியோ பதிவு? அப்படினா இப்போ அந்த cut out issues எல்லாம் போயிட்டு இருக்கு. இந்த மாதிரி court ல ஒரு order இருக்கு. கட்டவுட் வைக்கக் கூடாது. அதாவது கட்டவுட் வந்து மக்களுக்கு இடையூறு செய்கிற இடங்கள்ல வைக்கக் கூடாது ங்கிற கூடாதுங்கிற ஒரு. அதுக்காக தான் இந்த court orders எல்லாம். அதை நாங்க மதிக்கிறோம். அதையும் தாண்டி நம்ம எல்லாருக்குமே அவங்க உங்களோட followers னு இருப்பாங்க. அவங்க வந்து கட்சிக்காரர்கள் னு ஒரு பிறந்த நாளைக்கோ இதுக்கும் கட்அவுட் வைக்கிறப்போ அதை நாம போய் ஓரளவுக்கு மேல நம்மளால சொல்ல முடியாது. அந்த மாதிரி ஒரு சில இடங்கள்ல ஒருத்தவங்க வைப்பாங்க. அத பாத்துட்டு நாங்களும் வைக்கிறோம். இவங்களும் வைப்பாங்க. வேற கட்சிக்காரங்க வைப்பாங்க. So, ஏன் அவங்க தான் வைக்கணுமா? நாங்க வைக்கக் கூடாதுன்னு. இதெல்லாம் அரசியல்ல வந்து இந்த ஒரு ego இதெல்லாம் இருக்கும் வைக்கிறாங்க. அதே மாதிரி நாமளும் வந்து சரி court order மதிக்கணும் அப்படிங்கறதுக்காக கோர்ட்ல இருந்து நாம எதுவும் order against பண்ணக் கூடாதுன்னு கட்டவுட் எடுக்கிறோம். அனுமதிக்கிறோம். 


இதெல்லாம் போயிட்டு இருக்குற நேரத்துல ஒரு one week முன்னாடி ஒரு சம்மன் வருது. என்ன அப்படின்னு பாத்தா அந்த சம்மன் ஒண்ணுமே கிடையாது. அதாவது ஒரு அந்த கட்அவுட் வச்சதுக்கு இவங்க எல்லாம் காரணம் சொல்லணும் அப்படின்னு யார் யார் அப்படின்னு பாத்தீங்கன்னா எஸ். பி. எஸ். எஸ். எஸ். பி. எஸ். ஐ இன்ஸ்பெக்டர் இந்த மாதிரி Government officials எல்லாரும் சொல்லணும். கடைசியா கொம்யூன், பஞ்சாயத்து Commissioner, முனிசிபல் Commissioner இவங்கல்லாம் இருக்கணும் அப்படீன்னு இருக்கு. கடைசியா ஒரு ஆளு இருக்கு யாருன்னு. என்னோட படம் என்னோட வீட்டுல இருந்ததுனால அவங்களும் வந்து one of the respondent அவங்களும் வந்து பதில் சொல்லணும் அப்படின்னு சொன்னாங்க. ஓகே. கேள்வி கேக்குறாங்க அப்படின்னு. 


பின்னணியில் அமைச்சர்




சரி நமக்கு யாரு அத அனுப்பி இருப்பாங்கன்னு நம்ம பாக்குறப்போ எனக்கு வந்து. shocked. அவங்க ஒரு normal ஆன person. பாவம் அவங்க கிட்ட family நடத்துறதுக்கு கூட பெருசா கஷ்டப்படுற ஒருத்தவங்க ஒரு ஹைகோர்ட் போறதுன்னா எவ்ளோ செலவாகும்? ஒரு வக்கீல் வைக்கிறதுன்னா எவ்வளவு செலவாகும்? இதெல்லாம் தாண்டி பண்ற அளவுக்கு இல்லாத ஒரு மனுஷன் ஏன் அவங்க பண்ணியிருக்காங்கன்னு விசாரிக்கிறப்பதான் தெரியுது. என்னன்னா. இதுக்கு பின்னாடி ஒரு. அமைச்சர் அந்த மாதிரி இருக்காங்க அப்படின்னு சொல்லி எனக்கு வந்து நம்ம மினிஸ்டரா இருக்கறப்போ அவ்வளோ பிரச்சினைகள் எல்லாம் சமாளிச்சு அப்பா. நம்மளுக்கு இந்த பிரச்சினையே வேண்டாம். நம்ம பாட்டுக்கு தொகுதில நம்ம மக்கள் ஓட்டு போட்டுருக்காங்க. தேர்ந்தெடுத்துருக்காங்க. நம்ம வேலைய பாப்போம் அப்படின்னு சொல்லி நம்ம வந்து ஒதுங்கி வரோம். ஆனா நம்ம ஒதுங்குனதுக்கு அப்புறமும் ஒரு சுயநலமா ஒரு கண்ணுன்னு சொல்லுவாங்க இல்ல. எதுக்குன்னா ஒருத்தர் கண்ட்ரோல்ல நம்ம வந்து வர முடியல. அப்படின்னா ஒரு பொண்ணு எவ்ளோ டார்ச்சர் பண்ணுவாங்கங்கிறதுக்கு இதெல்லாம் ஒரு எக்ஸாம்பிள். 


ஏன்னா நானும் கொஞ்ச நாளாவே பாத்துகிட்டு இருக்கேன். பயங்கரமா ஒரு டார்ச்சர் உள்ளயே போய்கிட்டு இருக்கு. நம்மள டார்ச்சர் பண்ணா நம்ம அரசியலுக்கு வரும்போதே நாம எல்லாத்தையுமே மறந்து வெச்சிட்டு தான் வரோம். குடும்பமா இருக்கட்டும். நம்மளோட சொந்த விருப்பு, வெறுப்பு இதெல்லாம் தாண்டி politician ஆ. பப்ளிக்கு வெளில வந்துட்டோங்கும் போது எல்லாத்துக்கும் தான் நாம வந்து ரெடியா இருக்கணும். அதெல்லாம். But நம்ம கூட இருக்கறவங்க கஷ்டப்படக் கூடாது. அது மெயின் ஆன விஷயம். ஏன்னா நம்ம protective ஆ இருக்கறங்கறது தாண்டி நம்ம வந்து நம்ம கூட இருக்கறவங்கள protective ஆ பார்த்துக்கணும். ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அது தான் ஒரு நல்ல எண்ணங்கறது ரொம்ப முக்கியம்.


அவ்வளவு டார்ச்சர் பண்றாங்க




நம்ம வந்து மினிஸ்டரா இருந்தப்ப நமக்கு எவ்வளவோ பிரச்சனை எல்லாம் தந்தாங்க. அதெல்லாம் வந்து நாம எதையுமே வெளிக்காட்டிக்காம ரொம்ப நாசூக்கா வெளில வந்துட்டோம். இன்னைக்கு அந்த அமைச்சர்கள் பாத்தீங்கன்னா நம்மள அவ்ளோ டார்ச்சர் பண்றாங்க.நான் யாருன்னு பேரெல்லாம் சொல்ல விரும்பல. எல்லாரையும் எல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் எல்லாம் வெரி ஜெம். நம்ம எல்லாரையும் தப்பா சொல்லிட முடியாது. நான் சொல்றது ஒரு ஆளு ரெண்டு ஆளுன்னு வச்சுக்கோங்களேன். இந்த மாதிரி எல்லாம் அதாவது இதுனால ஒண்ணுமே கிடையாது. நம்மளுக்கு ஒரு தேவையில்லாத ஒரு அலைச்சல். அதாவது நம்மள டார்ச்சர் பண்றாங்களா மா? அதெல்லாம் வந்து உங்க பண்ணிக்கிட்டு இருக்காங்க. 


எனக்கு என்ன வருத்தமான விஷயம்னா. இதுல ஒரு எதுவுமே தெரியாத ஒரு பப்ளிக்ல வந்து பாவம் கஷ்டப்படுற ஒருத்தங்கள தேவை இல்லாம இதுக்குள்ள கொண்டு வரீங்க. இப்ப நம்ம அரசியலையும் தாண்டி நார்மலா இருக்கறதுனால பரவால்ல. நம்ம அவங்க சைட்ல இருந்து யோசிக்கிறோம். சரி. They are influenced. அவங்க அவங்களால பண்ண மாட்டாங்க அப்படின்னு நமக்கு தெரியுது. ஒரு கோர்ட் வச்சு எவ்வளவு வேலை, ஒரு அமைச்சரா இருந்தா எவ்வளவு வேலை இருக்கும்? அமைச்சர்ங்குறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல. மொதல்ல எம்எல்ஏங்கறதே அவ்ளோ சாதாரண விஷயம் இல்லை. ஏன்னா மக்களால் தேர்ந்தெடுக்கப்படுறது ஒரே வீட்டுல இருக்குற ஒருத்தர அவருக்கே புடிக்க மாட்டேங்குது. நம்மள மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்குறாங்க.


எவ்வளவோ கஷ்டங்களை எல்லாம் தாண்டி தமிழ்நாடு மாதிரி கூட கிடையாது. பாண்டிச்சேரில வீடு வீடா போயி ஒவ்வொருத்தர் கிட்டயும் ஓட்டு வாங்கி, அவங்கள நம்மள பிடிக்க வச்சு, நம்ம செய்ற வேலைகள் பிடிச்சி எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெயிக்கறோம். ஆனா வந்ததுக்கு அப்புறம் அதை எல்லாம் மறந்துட்டு உங்களுக்கு ஓட்டு போட்டு ஜனங்களை மறந்திட்டு ஓகே. நம்மகிட்ட எல்லாரும் controlled ஆ இருக்கணும். நம்ம பேச்ச மதிக்கலேன்னா அவங்கள எவ்ளோ டார்ச்சர் வேணாலும் பண்ணலாம். அவங்க எம்எல்ஏவா இருந்தாலும் சரி, யாரா இருந்தாலும் சரி அவங்கள நாம டார்ச்சர் பண்ணனும். எனக்கு தெரியல. 


ரொம்ப வருத்தமா இருக்கு




ஒரு எம்எல்ஏ வேற ஒரு ஜென்ஸ்சா இருந்தா அத பண்ணுவாங்களாம். பட் நம்மலா இருக்குறதுனால நம்ம கூட இருக்குறவங்க எல்லாரையும் வந்து டார்ச்சர் பண்றது, தேவையில்லாம கேஸ் போடறது இதெல்லாம் வந்து ரொம்ப வருத்தமா இருக்கு. வருத்தம் தரக்கூடிய ஒரு நாகரீகமான அரசியலா? இதுல என்ன பெருசா வர போகுது? நமக்கு ஓட்டு போட்ட ஜனங்களுக்கு அவங்களுக்கு ஒரு personal அட்வைஸ். நம்மளுக்கு ஓட்டு போடும் ஜனங்களுக்கு ஏதோ ஒன்னு பண்ணனும். ஏதோ ஒரு நல்லது பண்ணனும். கெட்டது பண்றது ரொம்ப ஈஸி. நல்லது பண்றது தான் ரொம்ப கஷ்டம். அதெல்லாம் இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் இனிமேலாவது கொஞ்சம் திருந்தி இத பண்ணுனா இத ஒரு அட்வைஸா பண்றேன். அது ஒரு விஷயமே கிடையாது.


நம்ம பாத்துட்டு போறோம். நம்ம என்னவோ நம்ம மேல தப்பு இல்லன்னா நம்ம வந்து அத பண்ணிட்டு போறோம். அது ஒண்ணுமே இல்ல. ஆனா நீங்க வந்து இதெல்லாம் ஒரு வேலையா விட்டுட்டு இது ஒரு வேலையா எடுத்து பண்றீங்கன்னா நீங்க எவ்ளோ free யா இருக்கீங்க. அப்ப மக்களை பத்தி யோசிக்காம எப்படி எல்லாம் இருக்கீங்கங்கறது இதுக்கு ஒரு உதாரணம். ஏன்னா அவங்க தொகுதில போய் கேக்கும்போது தான் தெரியும் அங்க எவ்வளவு பிரச்சனைகள் இருக்குன்னு. அதை சால்வ் பண்றதுக்கு உங்களுக்கு நேரம் இல்ல. ஆனா இதெல்லாம் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு நேரம் இருக்கு. ஏன்னா ஒரு பொண்ணு வளர்ந்து கஷ்டப்பட்டு வந்திரக்கூடாது. வந்துட்டா அய்யய்யோ அரசியலே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அவங்கள அசிங்கப்படுத்தி, அவங்கள எவ்ளோ கேவலப்படுத்த முடியுமோ கேவலப்படுத்தி. கூட இருக்கிற ஆளுங்களெல்லாம் கஷ்டப்படுத்தி கொண்டுட்டு வந்து வைக்கிறீங்க.


இது ஒரு அரசியல். இந்த மாதிரி அரசியல் எல்லாம் எனக்கு என்னுடைய அப்பா கத்து கொடுக்கல. நம்ம நம்ம யாருக்கும் நல்லது செய்யறவங்க தாண்டி யாருக்கும் எந்த கெட்டதும் செஞ்சிடக்கூடாதுன்னு சொல்லி வளர்த்த மனுஷனோட பொண்ணு நானு. அதனால நம்ம வளர்ப்பு நம்ம அப்படி இருக்கறதுனால யாரையும் கஷ்டப்படுத்தணும் அப்படின்னு தோண மாட்டேங்குது. இப்போ இந்த வீடியோ கூட எதுக்குன்னா நாம பண்ணிட்டோம். நாம பண்றதெல்லாம் தெரியாதுங்குற ஒரு எண்ணம் இருக்கும்ல உங்களுக்கு நீங்க பண்றது எல்லாமே தெரியும். தெரிஞ்சாலும் ஏன் ஒரே ஒரு விஷயத்துக்காக மட்டும் தான் உங்க பேரை யூஸ் பண்ணுறாங்களோ? உங்கள பத்தி நான் எதுவுமே சொல்லாமலே நீங்க எவ்வளவு டார்ச்சர் கொடுக்குறீங்க? 


வேவு பார்க்கிறார்கள்




அதாவது வீட்டுக்கு போற வழியில இருந்து நம்மள வேவு பாக்குறதுக்கு காலேஜுல இருந்து ஒரு ஸ்பை எல்லாம் நம்மள சுத்தி கிட்டே இருக்கும். இந்த மாதிரி ஸ்பை பண்றதுல இருந்து எல்லாமே நமக்கு தெரியும். என்னோட போனா இருக்கட்டும். அது வந்து. 

நீங்க என்னோட போன் ஓட டீடெய்ல் கலெக்ட் பண்றதுல இருந்து அதெல்லாம் எப்படி நீங்க வாங்கறீங்க? நீங்க எல்லாம் ரூமுக்குள்ள இருக்கறதுனால வாங்குறீங்க. அதெல்லாம் நீங்க வாங்குறது எனக்கு தெரியும். எனக்கு safety ஆன ஒரு இடத்துல நான் இல்லைங்கிறதும் எனக்கு தெரியும். 


அதை விட முக்கியமான விஷயம் ஒரு இதெல்லாம் நாம பீல் பண்ணி ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறோம். ஒரு பெரிய அதிகாரி அதை சொல்லக்கூடாது. வேற அந்த அதிகாரி அங்க உக்காந்துகிட்டு நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா. ஆனா என்ன பண்ணுவேன்னு கேக்கறப்போ சொல்றாங்க. வேணும்னா ஒண்ணு பண்ணுங்களேன். சொத்துக்களையெல்லாம் மாத்தி வச்சிருங்க வேற யார் பெயரிலாவது அப்படின்னு சொல்றார். ஒரு அதிகாரி சொல்கிறார். என்ன மாதிரியான இன்ப்ளூயன்ஸ் பண்ணிருந்தா இப்படி சொல்வார். காமன் மேனுக்கு என்னெல்லாம் நடக்கும். நமக்கே இப்படின்னா. நீங்க எது செய்தாலும் எனக்கு பாதிப்பு வராது. எத்தனையோ பார்த்தாச்சு. துணிஞ்சுதான் வந்திருக்கோம். மக்களுக்கு நல்லது செய்யணும்.


ரங்கசாமிக்காக பொறுத்துப் போகிறேன்




இன்னும் எட்டு மாதங்கள் தான் ஆட்சி காலம் இருக்கும். மக்கள் தான் அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும். மக்களை போய் சந்தித்து தேர்தல் வேலையை பாருங்க. ஒரே ஒருவருக்காக மட்டும் தான் நான் அனைத்தையும் பொறுத்து போகிறேன். அது என்ஆர்., ஐயாவிற்காக தான். என்னுடைய அப்பா ஸ்தானத்தில் அவர் இருக்கிறார். அவருக்காக மட்டுமே நான் யார் பெயரையும் சொல்லாமல் விட்டேன். அவரே பல விஷயங்களை பொறுத்து போகிறார். அவருக்காக தான் இவ்வளவு எல்லாம் பேசி விட்டு பெயரை சொல்லாமல் போகிறேன். 


அமைச்சர்கள் அனைவரும் மக்களை சந்தித்து நல்லது பண்ணுங்க. வேலையை பாருங்க. என்னையும் வேலை பார்க்க விடுங்க. என்னை நம்பி நிறைய பேர் இருக்காங்க. அரசியல் சார்ந்த குடும்பத்தில் நிறைய பேரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதனால் நீங்களும் வேலை பாருங்க. என்னையும் வேலை பார்க்க விடுங்க. தேவையில்லாத அலைச்சல், தேவையில்லாத செலவு. ஒரு வக்கீலுக்கு கொடுக்கும் பணத்தை என் கூட நிற்பவருக்கு கொடுக்கலாம். படிக்க பீஸ் கட்டலாம். இப்படி எவ்வளவோ பண்ணலாம். இதுக்கு மேலையும் இப்படி தான் பண்ணுவேன்னு சொன்னீங்கன்னா, எல்லா தொகுதியிலும் பெண்கள் ஓட்டு அதிகம். அனைவருக்கும் அனைத்தும் தெரியும். நான் பேசும் போதே நிறைய லேடீஸ் கண்டுபிடிச்சிருப்பாங்க, நான் யாரை பேசுகிறேன் என்று. நல்லா இருக்காது. நீங்களும் வாழுங்க. என்னையும் வாழ விடுங்க. நன்றி என்று கூறியுள்ளார் சந்திர பிரியங்கா.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் செப்., 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 620 பேர் பலி!

news

Hello September .. செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. எவ்வளவு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!

news

ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்விற்கும் தகுதி தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம்!

news

காஞ்சனா 4.. பேய்ப் படத்தில் ராஷ்மிகா.. ராகவா லாரன்ஸின் அடுத்த அதகளம் ரெடி.. வேற லெவல் பிளான்!

news

ரஜினியைத் தொடர்ந்து இவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.. நெல்சன் வெளியிட்ட ஆசை!

news

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்றே கடைசி.. EC மீது எதிர்க்கட்சிகள் புகார்

news

எங்கு சென்றாலும் தமிழன் இருப்பான்.. நம் தொப்புள்கொடி உறவு அறுந்துவிடவில்லை: முதல்வர் முக ஸ்டாலின்

news

சென்னையில் இன்று முதல் டீ,காபி விலை உயர்வு.. அச்சச்சோ.. குடிக்காம இருக்க முடியாதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்