புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு செல்லவும் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவையையும் செயல்படுத்தி வருகிறது.

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் உடனே திரும்ப முடியாத காரணத்தால் வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட வியாழன், வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு, என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தீபாவளி முந்தின நாள் கடைகளில் கூட்ட நெரிசல், வீட்டில் வேலை செய்தல் உள்ளிட்ட காரணங்களால் தீபாவளிக்கு முந்தின நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசிடம் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதற்கு மாற்றாக 16 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளித்ததால் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்து வருகின்றனர் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனிமை சேர்ந்திடவே இதயமும் மகிழ்ந்திடவே.. காணும் பொங்கல்!
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு
சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த தலைவர்: எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து!
ஜனவரியில் அரங்கேறிய வரலாறு.. மெட்ராஸ் மாகாணம் எப்படி தமிழ்நாடு ஆனது?
விழியில் விழி மோதி!
கள்ளிக்காட்டு இதிகாசம்... கனவு நனவாகிறது: கவிஞர் வைரமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு!
வீட்டில் மகிழ்ச்சி பொங்கவே .. உலகில் ஒற்றுமை தழைக்கவே!!!
{{comments.comment}}