சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் இடமாற்றம் என்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரவு 16 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்துள்ளார்.
கவிதா ராமு இடமாற்றம்
அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ஆனி மேரி ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக உமா, புதுக்கோட்டை கலெக்டராக மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் மனம் கவர்ந்த கலெக்டர் கவிதா ராமு மாற்றப்பட்டுள்ளார்.
கவிதா ராமு ஐஏஎஸ் வணிகவரித்துறை இணை ஆணையராக (புலனாய்வு) இடமாற்றம் செய்யப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை கலெக்டராக சிறப்பாக அவர் செயல்பட்டு வந்தார் என்பது நினைவிருக்கலாம். வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்ட அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கேள்விக்குறியான நிலையில் தற்போது கவிதா ராமு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்து வரும் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய கலெக்டராக கலைச்செல்வி மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு புதிய கலெக்டராக கமல் கிஷோர் பணியாற்றுவார்.
சிவகங்கைக்கு ஆஷா அஜீத்
மதுரை மாவட்டத்தின் கலெக்டராக சங்கீதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்திற்கு விஷ்ணு சந்திரன், சிவகங்கைக்கு ஆஷா அஜீத், திருப்பூர் கலெக்டராக கிருஸ்துராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியின் புதிய கலெக்டராக சராயு நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத், திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு கலெக்டராக ராஜகோபால் சுங்கரா அறிவிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டனம் மாவட்டத்தின் புதிய கலெக்டரா ஜான் டாம் வர்கீஸ் செயல்படுவார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}