ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாக உள்ளது என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2021ம் ஆண்டு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்து சூப்பர் டுப்பர் ஹிட் ஆன படம் புஷ்பா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள 'புஷ்பா 2: தி ரூல்' படத்தை மேஸ்ட்ரோ சுகுமார் இயக்கியுள்ளார்.

படத்தில் ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இணையற்ற சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலேயே தேதியை தள்ளி வைத்துள்ளனராம். படத்தைத் தரத்துடன் முடிக்க இன்னும் டைம் தேவைப்படுகிறதாம். இதனால்தான் ஆகஸ்ட்டிலிருந்து டிசம்பருக்குக் கொண்டு போய் விட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'புஷ்பா2' தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. படத்தின் புரோமோஷனாக வெளியான பாடல்கள் மற்றும் டீசர் என ஒவ்வொன்றும் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து அதிர வைத்துள்ளது.
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்
எதிர்மறை எண்ணங்கள்.. எப்போதும் பிரகாசமான எதிர்காலத்தைத் தராது!
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
கரூருக்கு வரமாட்டீங்களா?...ஈரோட்டில் விஜய்க்கு எதிரான போஸ்டர்களால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 18, 2025... இன்று நல்ல காலம் பிறக்குது
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
மார்கழி 03ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 03 வரிகள்
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் மார்கழி,15 சொர்க்க வாசல் திறப்பு
{{comments.comment}}