காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!

Jul 29, 2025,04:58 PM IST

சென்னை:  2025-26ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி வெளியிட்டுள்ளார்.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி, கடந்த ஆண்டைப் போலவே, 2025-2026வது கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.




ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி,செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.


ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15ல் தொடங்கி டிசம்பர் 23ல் நிறைவடையும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படும்.


2025-26ம் கல்வியாண்டிற்கா பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்