டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேச சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டும்படி கேட்டுள்ளார். இந்த தாக்குதலில் 35 சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு காஷ்மீரி கொல்லப்பட்டனர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதே கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளார். நாட்டு ஒற்றுமையை காட்டவும், பயங்கரவாதத்தை எதிர்க்கவும் இந்த சிறப்பு கூட்டத்தொடர் உதவும் என்று நம்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், பஹல்காம் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் உலுக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்திருக்கிறோம் என்பதை நாம் காட்ட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே எழுதிய கடிதத்தில், பிரதமர் அவர்களே, ஒற்றுமை தேவைப்படும் இந்த நேரத்தில், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}