குடையுடன் போங்க மக்களே.. தமிழ்நாட்டில் 7 நாட்கள்.. மழைக்கு வாய்ப்பு.. இரவில் நனைந்த சென்னை!

Sep 06, 2024,08:55 PM IST

சென்னை: வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் நேற்று அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல் ஒரு சில பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. குறிப்பாக கும்பகோணம், சீர்காழி, வந்தவாசி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகளில் வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது. அதேசமயம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளில் மிக கனமழை வெளுத்து வாங்கியது. 




இதற்கிடையே தற்போது திருவள்ளுவர் மாவட்டம் மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நல்ல மழை பெய்துள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் அதிகபட்சமாக 5.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


இந்த நிலையில்  வங்க கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் நேற்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தழ்வுப் பகுதி இன்னும் 3 தினங்களில் வடக்கு மற்றும் வடமேற்கு வங்க கடல் திசையை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என கணித்துள்ளது.


இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: 


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்