தமிழ்நாட்டில்.. இன்று முதல்.. 25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

Aug 20, 2024,05:32 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை பரவலாக மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் நேற்று அனேக இடங்களில் மிதமான கனமழை கொட்டி தீர்த்தது. அதில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை நீடித்தது. அதேபோல் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால்  பஞ்சலிங்க அருவிகளில்  காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.இதனால் திருமூர்த்தி மலை அடிவாரத்தில் உள்ள கோயிலை மழை நீர் சூழ்ந்தது.




கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியதில் அய்யர்மலை, ரத்னகிரீஸ்வர் மலையில் உள்ள கோயில் படிக்கட்டுகளில் மழை நீர் அருவி போல் கொட்டியது. அதே சமயம் தேனி, ஆண்டிப்பட்டி, உதகை, மதுரை, உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. குறிப்பாக உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 5.3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.


இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


 மேலும் கோவை, சேலம், கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையில் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்