சென்னை: என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன் சார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர்.

இவரது மறைவிற்கு முக்கிய திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மிகப்பெரிய மனிதர், ஜென்டில் மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்தான். இவர் எப்போது வெள்ளை துணி தான் உடுத்துவார். இது போல அவர் உள்ளமும் வெள்ளைதான். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். என்மீது அதிகம் அன்பு கொண்டவர். என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர். நான் ஏவிஎம் ஸ்டுடியோவில் 9 படங்களை செய்துள்ளேன்.
அந்த 9 படங்களும் பெரிய ஹிட். அதற்கு மெயின் காரணம் சரவணன் சார் தான் என்று சொன்னால் மிகையாகாது. 1980 இல் மிகப்பெரிய செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை, 2000த்தில் சிவாஜி. இந்த படங்கள் மிக பிரம்மாண்டமான படங்கள். அதே போல 2026ல் இதைவிட மிகப் பிரம்மாண்டமான படம் எடுக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். அது நடக்கவில்லை.
அவருடைய மறைவு என் மனசை ரொம்ப பாதிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}