- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 20 26 ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரக்ஷா பந்தன் அனுஷ்டிக்கப்படுகிறது.
"ரக்ஷா "என்றால் 'காப்பாற்றுதல் '. "பந்தன் "என்றால் உறவு அல்லது பிணைப்பு என்று பொருள்படுகிறது. ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளின் அன்பையும், பாதுகாப்பையும் குறிக்கும் ஒரு பாரம்பரிய பண்டிகையாகும். இந்த நன்னாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி என்னும் பாதுகாப்பு நூல் கட்டுவார்கள். அதற்கு பதிலாக சகோதரன் அவர்களுக்கு பரிசுகள் அளித்து வாழ்நாள் முழுவதும் சகோதரிகளுக்கு தான் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி அளிக்கும் நாள் "ரக்ஷா பந்தன்" ஆகும்.
ரக்ஷா பந்தன் தேதி மற்றும் சுபமுகூர்த்த உகந்த நேரம் :
ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை ராக்கி கட்டும் நேரம் (சுபமுகூர்த்த நேரம்) காலை05: 57 மணி முதல் காலை 09:48 மணி வரை மிக மங்களகரமான நேரம் ஆகும்.
பௌர்ணமி திதி ஆகஸ்ட் 27 காலை 09 :08 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 28 காலை 09:48 மணிக்கு நிறைவடைகிறது. சூரிய உதயத்தின் போது இருக்கும் திதியின் அடிப்படையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பத்ரா காலம் ( அசுபநேரம் ):

2026 ஆண்டு பத்ரா காலம் ஆகஸ்ட் 28ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே முடிவடைகிறது. எனவே, காலையில் எந்தவித தடையும் இல்லாமல் புனிதமான சுப முகூர்த்த நேரத்தில் ராக்கி கட்டுவது சிறப்பு.
ரக்ஷா பந்தன் ஏன்? கொண்டாடுகிறோம் என்பதன் பின்னணியில் பல புராணங்கள் மற்றும் வரலாற்று கதைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பதிவில் காண்போம்..
புராணக்கதை :
கிருஷ்ணர் மற்றும் திரௌபதியின் அன்பை வெளிப்படுத்தும் மகாபாரதத்தில் உள்ள புராணக்கதை இது. ஒரு முறை போர்க்களத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அதனைக் கண்ட திரௌபதி தனது புடவையில் ஒரு பகுதியை கிழித்து கிருஷ்ணரின் விரலில் கட்டினார், தன் மீதான அந்த அன்பிற்காக கிருஷ்ணர் அவளுக்கு எப்பொழுதும்,எந்த ஆபத்து நேர்ந்தாலும் திரௌபதியை காப்பதாக வாக்கு அளித்தார்.
அதன் பின்னர் பாண்டவர்கள், சூதாட்டத்தில் தோல்வியுற்ற போது சபையில் திரௌபதியின் மானம் அத்தியாயம் செய்யப்பட்ட நேரத்தில், கிருஷ்ணர் திரௌபதியை காப்பதற்காக புடவையை நீளச்செய்து திரௌபதியின் மானத்தை காப்பாற்றினார். கிருஷ்ண பரமாத்மா திரௌபதிக்கு சகோதரனாகவும், பாதுகாப்பாகவும் இருந்து அவளுடைய மானத்தை காப்பாற்றிய இந்தக் கதையிலிருந்து "ரக்ஷா பந்தன் " பற்றிய சிறப்பினை அறிந்து கொள்ளலாம்.
லக்ஷ்மி தேவி மற்றும் மகாபலி சக்கரவர்த்தியின் கதை :
லட்சுமி தேவி மகாபலி மன்னனின் மணிக்கட்டில் புனித நூலை கட்டி பாதாள உலகில் இருந்த விஷ்ணு பகவானை மீட்டுத் தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார் இதுவே "ரக்ஷா சூத்திரம்" அதாவது காப்பு நூல் என்ற பெயரின் அடிப்படையாகும்.
எமன் மற்றும் யமுனை :
மரணத்தின் கடவுளான எமனுக்கு அவருடைய சகோதரி யமுனை ஒவ்வொரு ஆண்டும் ராக்கி கட்டினார். இதனால் மகிழ்ச்சி அடைந்தார். எமன் தனது சகோதரியிடம் ராக்கி கட்டிக் கொள்ளும் சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என வரம் அளித்தார்,என்னும் புராணக் கதையும் உண்டு.
ராணி கர்ணாவதியும்- ஹுமாயூன் கதை:
சித்தூர் ராணி கர்ணாவதி, பேரரசர் ஹுமாயூனுக்கு தன் பாதுகாப்புக் கோரி ராக்கி அனுப்பியதாகவும், அதை ஏற்று அவர் உதவி செய்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இவ்வாறு புராணங்களிலும், வரலாற்றுக் கதைகளிலும் ராக்கி கட்டும் வழக்கம் இருப்பதை வடநாடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்தியர்களும் ரக்ஷாபந்தன் பண்டிகையை வெகுசிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இன்னும் ரக்ஷா பந்தன் பற்றிய சிறப்புகளை அடுத்த பதிவிலும் காண்போம்.மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
அழகிய நினைவுகள்!
In Loving Memory of Rosaline Arulpragasam
Feel Good Poem: நாம்!
ரக்ஷாபந்தன் என்றால் என்ன.. நாம் ஏன் அதைக் கொண்டாடுகிறோம்?
விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்..?
2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
{{comments.comment}}