சென்னை: அப்பா மகன் உறவை அழுத்தமாக சொல்லும் குடும்ப பின்னணியில் உருவாகும் ராமராகவம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக தயாராக உள்ளது.
தமிழ் சினிமாவில் சமுத்திரகனி 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னைச் சரணடைந்தேன் என்ற படம் மூலம் கதாசிரியராக அறிமுகமானவர். இப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் என்ற விருதுயும் பெற்றார். அதேபோல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் படத்தை மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை வெற்றி பெற்றது. இப்படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்து வெளியிட்டார்.

இப்படம் மூலம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இயக்குனராக அறிமுகமானார். இதற்கிடையே தமிழில் பார்த்தாலே பரவசம், பருத்திவீரன், உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம் படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார். இப்படத்திற்கான சிறந்த துணை நடிகர் விருதினையும் பெற்றார். அதே போல் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,உள்ளிட்ட மொழிகளில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மாறி மாறி வலம் வருகிறார்.
இப்படியாக தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி தற்போது தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் ராமராகவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சமுத்திரக்கனி அப்பாவாகவும், தன்ராஜ் மகனாகவும் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க அப்பா மகள் உறவை சொல்லும் படமாக, குடும்பத்தோடு கண்டு களிக்கும் படமாக உருவாக்கப் பட்டிருக்கிறதாம்.
.jpg)
இந்த நிலையில் ராமராகவம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் குலசாமி போல என்ற பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளி வரவுள்ள உள்ள இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தெலுங்கு திரை உலகை சார்ந்தவர்கள் ராமராகவம் படத்தை பார்த்துவிட்டு சமூகத்திற்கு அவசியமான, அதே சமயம் கலகலப்பான குடும்ப திரைப்படம் என்று சமுத்திரகனியும் இயக்குனர் தன்ராஜை பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}