சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று முதல் ரமலான் நோன்பு துவங்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் வரும் 12 மாதத்தில் இஸ்லாமிய நாட்காட்டியின் படி வரும் ஒன்பதாவது மாதம் ரமமதான். இந்த மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் 29 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை நோன்பு மேற்கொள்வது வழக்கம்.
இஸ்லாமியர்களின் நோன்புகள்:
பொதுவாக எல்லா மாதத்திலும் அம்மாவாசை முடிந்து மூன்றாவது நாள் பிறை தெரியும். இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் பிறை பார்த்த பின்னரே நோன்புகளை தொடங்குவார்.அந்த வகையில் நேற்று பிறை தெரிந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த நோன்பின் இறுதி நாளை ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
முன்னதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹுதீன் முகமது அயூப் நேற்று பிறை தெரிந்தை தொடர்ந்து இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இஸ்லாமியர்கள் நோன்பு எப்படி பின்பற்றுவர்:
இஸ்லாமியர்கள் நோன்புகளை மேற்கொள்ளும்போது அதிகாலையிலேயே சாப்பிட்டு முடித்து விடுவர். பின்னர் காலை சூரியன் உதிப்பது முதல் மாலை சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பர். அந்த நேரத்தில் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள். அன்றைய தினம் மாலை பள்ளிவாசல் சென்று தொழுகையை முடித்து, நோன்பு கஞ்சி அருந்திய பின்னரே நோன்பு முடிப்பர்.
ரம்ஜான் நோன்பின் மகிமைகள்:
நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை எல்லாம் விலக்கி, இறைவனிடத்திலுள்ள நன்மையை மட்டுமே எதிர்பார்த்தவராக இருப்பது. நோன்பு இருப்பவர்கள் பகல் நேரத்தில் தன்னையே கட்டுப்படுத்திக் கொள்வது. இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
இறையச்சம் என்பது அல்லாவிற்கு பயந்து, அறிவுறுத்திய செயல்களை செய்தும், தடை செய்தவைகளை செய்யாமல் இருப்பது தான்.
இந்த நாளில் வசதி இல்லாதவர்கள் பசி பட்டினியோடு இருப்பதை உணர்வதற்காகவே நோன்பு இருந்து வருகின்றனர் இஸ்லாமியர்கள். மேலும் நோன்பு மேற்கொள்ளும் போது ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதே இஸ்லாமியர்களின் தலையாய கடமையாகும். இந்த உதவியை இஸ்லாமியர்கள் சகத் என்றும் அழைக்கின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}