மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தன்னாவுக்கு சின்னதா ஆக்சிடன்ட் ஆயிருச்சாம். அதனால்தான் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைப் பக்கங்களில் இடையில் அவரைக் காணோமாம். இப்ப சரியாயிட்டாராம்.
பான் இந்தியா நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என்று புயல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார் புஷ்பா நாயகி. சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக வலம் வருபவர். ஆனால் சமீப காலமாக அதிகம் ஆக்டிவாக இல்லை. இதனால் ரசிகர்கள் என்னாச்சு என்ற கேள்விகளைக் கேட்டு வந்தனர்.
இதற்கான விளக்கத்தை ராஷ்மிகாவே கொடுத்துள்ளார். அது இதுதான்:
ஹாய் கய்ஸ்.. எப்படி இருக்கீங்க.. கொஞ்ச நாளை நான் இந்தப் பக்கம் வரலைன்னு உங்களுக்கு தெரியும். பொது வெளியில் கூட என்னை அதிகம் பார்த்திருக்க மாட்டீங்க. அதுக்கு என்ன காரணம்னா, கடந்த ஒரு மாசமா நான் வெளியில் தலை காட்டலை. சின்னதா ஒரு ஆக்சிடன்ட் ஆயிருச்சு. அதுதான் காரணம். ரொம்பெல்லாம் இல்லை, ரொம்ப சின்ன ஆக்சிடன்ட்தான்.
வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்து வந்தேன். டாக்டர்ஸ், அதிகம் அலட்டிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தனர். அதனாலதான் வர முடியல்லை. இப்போ நல்லாயிட்டேன். கொஞ்சம் பரவாயில்லை. சூப்பர் ஆக்டிவாக மாறக் கூடிய தருணத்திற்கு வந்துட்டேன். எனது வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.
எப்பவுமே உங்களை முதல்ல நல்லா பாத்துக்கங்க. வாழ்க்கை ரொம்ப ரொம்ப சின்னது, விரைவிலேயே முடிஞ்சுப் போகக் கூடியது. நாளைக்கு வருமான்னு தெரியாது.. ஸோ, இன்னிக்கு உள்ள நாளை சந்தோஷமா கழிங்க.
அப்புறம் காதைக் கொடுங்க.. இன்னொரு முக்கியமான விஷயம்.. இப்ப நிறைய லட்டு சாப்பிட்டுட்டு இருக்கேன் என்று கூறி கலகலப்பைக் கொடுத்துள்ளார் ராஷ்மிகா.
ஒரு லட்டு.. ஏகப்பட்ட லட்டுக்களை சாப்பிடுகிறதே.. அடடே ஆச்சரியக்குறி.. அப்படின்னு போய் அவங்க இன்ஸ்டா பக்கத்துல கவிதை எழுதுங்க ஓடுங்க ஓடுங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிக்கப்பட இது தான் காரணமா?
Rain forecast: தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கு.. என்ஜாய்!
ஜெயிலர் 2: ரஜினிகாந்துடன் மோகன்லால் மீண்டும் இணைவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
வெளுக்குது வெயிலு.. ஏசி யூஸ் பண்றீங்களா.. அப்ப இதையெல்லாம் மறக்காம பாலோ பண்ணுங்க!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?
உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!
ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!
கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!
அமைச்சர் ரகுபதியின் சட்டத்துறை.. துரைமுருகனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு.. திடீர் இலாகா மாற்றம்