கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

Oct 04, 2025,05:16 PM IST
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ஒரு முக்கியமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். உலகத்தில் எப்போது எல்லாம் பதற்றம் அல்லது பெரிய குழப்பம் வருகிறதோ, அப்போது அந்தப் பயத்தைக் காட்டுகிற அடையாளமாக முன்பு கச்சா எண்ணெய் இருந்தது. ஆனால், இப்போது அந்த இடத்தை தங்கம் பிடித்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், இப்போது கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் ஏறாமல், நிலையாக இருக்கிறது. ஏனென்றால், உலக நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எண்ணெயைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டன. ஆனால், இந்தப் பதற்றம் எங்கே போயிற்று? இப்போது அந்தப் பதற்றம் தான் தங்கத்தின் விலையை தொடர்ந்து ஏற்றி வருகிறது. நிச்சயமற்ற சூழலை இப்போது தங்கம் தான் காட்டுகிறது.



இப்போது கிட்டத்தட்ட எல்லா பெரிய பொருளாதார நாடுகளிலும் பணம் தொடர்பான நிதி நெருக்கடிகள் உள்ளன. மேலும், தொழில்நுட்பப் பங்குகளின் விலை அதிகமாக ஏறியிருப்பதால், உலக பங்குச் சந்தைகள் அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றன. இது ஆபத்து. அதனால், ஷேர் மார்க்கெட்டில் (பங்குச் சந்தையில்) ஒரு பெரிய சரிவு வரலாம்.

இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைக்க தங்கத்தை நாடுகிறார்கள். அதனால்தான், தங்கம் தொடர்ந்து ஏழாவது வாரமாக விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் தங்கம் 1,200% விலை உயர்ந்து, ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!

news

2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?

news

அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை

news

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு

news

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?

news

71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு

news

அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

news

சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்