முதல் போட்டியிலேயே... ஹைதராபாத்தைப் புடைத்தெடுத்து.. வெற்றியைத் துடைத்து எடுத்த ஆர்சிபி

Mar 28, 2026,07:57 PM IST

பெங்களூரு:  2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிபிக்கெட் திருவிழா பெங்களூருவில் இன்று பிரம்மாண்டமாக துவங்கி உள்ளது. முதல் போட்டியிலேயே பெங்களூரு அணி, தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


குறிப்பாக விராட் கோலியின் ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது. பந்துகளை நாலாபுறமும் அவர் பறக்க விட்ட விதத்தைப் பார்த்தபோது யாருக்கோ கொடுத்த அதிரடியான பதிலடியாகவே அது தெரிந்தது. 


ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது. இதனால் 202 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.




ஆரம்பத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது பெங்களூரு அணி. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்தாலும் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து ஆடி விராத் கோலி அதிரடியாக ஆடி 69 ரன்களை சேர்த்தார். பெங்களூரு அணி அதிரடியாக பேட்டிங் செய்தாலும், மற்றொரு புறம் ஐதராபாத் அணி சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஐதராபாத் அணியின் பவுலர்கள் அதிக அளவில் கொடுத்த எக்ஸ்டிராஸ் மற்றும் வைடு பந்துகளும் பெங்களூரு அணியின் ரன்கள் மளமளவென உயருவதற்கு காரணமாக அமைந்தன.


முன்னதாக போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  கடந்த 2025 சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வென்ற பின்னர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆர்சிபி வீரர்கள் கையில் கருப்பு நிறப் பட்டை அணிந்து விளையாடினர்.


ஆர்சிபி அணியை ரஜத் படிதார் வழிநடத்த, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷன் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.




கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி, இந்த ஆண்டையும் வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம் பலமான பேட்டிங் வரிசையைக் கொண்ட ஹைதராபாத் அணி ஆர்சிபிக்கு சவால் அளிக்கத் தயாராக உள்ளது.


இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடியைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்