திருவனந்தபுரம் : கேரளாவில் நிபா வைரஸ் பரவல் வேகமெடுக்க துவங்கி உள்ளதை அடுத்து, அங்குள்ள 3 மாவட்டங்களுக்கு மத்திய சுகாரத்துறை சார்பில் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இந்த மூன்று மாவட்டங்களிலும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 340க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மலப்புரம் மாவட்டத்தில், வைரஸ் பரவியதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மக்கரபரம்பா, குருவா, கூட்டிலங்காடி, மன்கடா ஆகிய ஊராட்சிகளில் 20 வார்டுகளில் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. சுகாதார பணியாளர்கள் 60 குழுக்களாக பிரிந்து 1,655 வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தொடர்பு தடமறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை சமாளிக்க ஆம்புலன்ஸ் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு மனநல ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நிபா வைரஸ் ஏன் ஒவ்வொரு வருடமும் பரவுகிறது என்பது பற்றி நிபுணர்கள் கூறுகையில், வனவிலங்குகளின் நடத்தை மற்றும் மனிதர்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்கின்றனர். கேரளாவில் நிபா வைரஸ் அடிக்கடி பரவுவதற்கு முக்கிய காரணம், அந்த பகுதியின் சூழலியல் ஆகும். அங்குள்ள தட்பவெப்ப நிலை மற்றும் நிலப்பரப்பு, அடர்த்தியான பழ மரங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான வெளவால்களுக்கு சாதகமாக உள்ளது. வெளவால்கள் தான் இந்த வைரஸின் இயற்கை ஆதாரமாக இருக்கின்றன. நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், மனிதர்கள் வெளவால் வசிக்கும் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வது, புதிய பழங்களை சாப்பிடுவது அல்லது கள் குடிக்கும் பழக்கம் போன்றவை வெளவால்-மனித தொடர்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் ஆகும். இது முக்கியமாக பழம் உண்ணும் வெளவால்கள் மூலம் பரவுகிறது. மேலும், பன்றிகள், ஆடுகள், குதிரைகள், நாய்கள் அல்லது பூனைகள் மூலமாகவும் பரவலாம்.
நிபா வைரஸின் அறிகுறிகள்:
- அதிக காய்ச்சல்
- கடுமையான தலைவலி
- சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல்
- இருமல் மற்றும் தொண்டை வலி
- தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு காரணமாக நீர்ச்சத்து குறைதல்
- வாந்தி
- தசை வலி மற்றும் கடுமையான பலவீனம்
வைரஸ் பாதித்த நான்கு முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. முதலில் காய்ச்சல் அல்லது தலைவலி ஏற்பட்டு பின்னர் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு
திருப்புவனம் இளைஞர் கொலை : தவெக போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி
திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு... தடையை மீறி போராடுவேன்... சீமான்!
ரெட் அலார்ட்...கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்
பெங்களுருவில் இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய கும்பலால் பரபரப்பு
அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் கோவி.செழியன்!
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
வார தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு!
{{comments.comment}}