சென்னை: புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வருகின்ற 26ம் தேதி திறக்கப்பட உள்ளதாக சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நவீனமான முறையில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்பொழுது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்து வரும் 26 ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலம் பாதிப்பால் காலமானார். இதை அடுத்து அவரது உடல், அண்ணா சமாதிக்குப் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் கட்ட 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நிதி ஓதுக்கப்பட்டது. இதையடுத்து 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த நினைவிடம் புனரமைக்கப்பட்டு வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகிறது.
பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர். கலைஞர் நினைவிடம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரை உருவாக்கிய நமது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடமும் கலைஞரின் நினைவிடமும் வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாக நடத்த முடிவெடுத்துள்ளோம். ஆகவே நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சி மற்றும் தோழமைக் கட்சி உட்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வர வேண்டும் என்று சபாநாயகர் மூலம் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}