ஏம்மா என்னைய விட்டுட்டுப் போன.. தவிச்சுப் போன குட்டி.. தெப்பக்காட்டில் அடைக்கலம்.. சூப்பர் கவனிப்பு!

Jun 11, 2024,06:11 PM IST

நீலகிரி: கடந்த ஒரு வாரமாக தாயிடம் இருந்து பிரிந்து வாடி வந்த குட்டி யானையை, தாயுடன் சேர்க்க வனத்துறையினர் போராடிய நிலையில், தாய் யானை குட்டி யானையை நிராகரித்து விட்டது. இதனால் குட்டி யானையை முதுமலை புலிகள் சரணாலய வளாகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு சிறப்பாக கவனித்து வருகின்றனர்.


கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி  உடல் நலக்குறைவால் பெண் யானை ஒன்று நகர முடியாமல் கிடந்தது. அதன் வயது கிட்டத்தட்ட 40 இருக்கும்.அதனுடன் மூன்று மாத ஆண் குட்டி யானையும் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் தாய் யானையை பொக்லைன் மூலம் மீட்டு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர்.அப்போது தாயுடன் இருந்த குட்டி யானையையும் வனத்துறையினர் பரமரித்து வந்தனர். 




இந்த நிலைியல் தாய் யானை உடல் நலம் தேறியதும் காட்டுக்குள் சென்று தனது கூட்டத்துடன் இணைந்தது. ஆனால் தனது குட்டியை தன்னுடன் சேர்க்க மறுத்து விட்டது. தாய் யானையுடன் சேர முடியாததால் குட்டி யானை தவித்தபடி அங்குமிங்கும் திரிந்துள்ளது. அதன் பிளிறல் சத்தம் கேட்டுவிரைந்து சென்ற வனத்துறையினர் டாப்சிலிப் பகுதிக்கு பாகனை அழைத்து வந்தனர். இதன் பின்னர் பாகன் உதவியுடன், தாய் யானையை கண்டறிந்து குட்டி யானையை தாயுடன் சேர்க்க பல கட்டமாக முயற்சிகளை மேற்கொண்டனர். 


ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியை தழுவியது. இதனால் குட்டி யானைக்கு பால் பழம் கொடுத்து ஒரு குழந்தையைப் போல பாகன் மிகவும் பாசமாக கவனித்து வந்தார். கடந்த மூன்று நாட்களாக குட்டி யானையை மீண்டும் மீண்டும் தாயுடன் சேர்ப்பதற்கான பணிகளை வனத்துறையினர் தீவிர படுத்தினர். இந்த நிலையில் தாய் யானை குட்டி யானையை நிராகரித்து விரட்டியதால் வேறு வழியில்லாமல், வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின் படி முதுமலை புலிகள் காப்பத்தில் உள்ள தெப்பக்காடு யானை முகாமில் குட்டி யானையை பராமரிக்குமாறு உத்தரவிட்டனர். 




இதன்படி,குட்டி யானை இன்று அதிகாலை நான்கு மணி அளவில் முதுமலை யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு குட்டி யானையை பாகன் சிறப்பாக கவனித்துக் கொள்கிறார். அதற்குத் தேவையான உணவு பால் பழம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. அதே முகாமில் மேலும் ஒரு குட்டி யானையும் இருக்கிறது. இதனால் மீட்கப்பட்ட குட்டி யானைக்கு சரியான கம்பெனி கிடைத்துள்ளதால் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொதுவாகவே குட்டி யானைகளை தாய் யானை கைவிடாது. ஆனால் எப்போதாவது அரிதாக இதுபோல நடக்குமாம். இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்

news

இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்