லண்டன்: இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் அனல் பறக்க இந்தியா விளையாடிக் கொண்டுள்ள நிலையில் மறுபக்கம் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது மனைவியுடன் அதே இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்துக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. முதல் டெஸ்ட்டை இங்கிலாந்தும், 2வது டெஸ்ட்டை இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு குட்பை சொல்லி விட்ட முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார்.
ரோஹித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். லண்டனில் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் சிம்பிளாக ஓய்வைக் கழிப்பது போன்ற புகைப்படத்தை அதில் போட்டுள்ளார். ரோஹித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், லண்டனின் கோடை வெயிலில் ஒரு பூங்காவில் உள்ள குன்றின் மீது அமர்ந்து அவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அதேபோல இன்னொரு படத்தில், ரோஹித் ஒரு ஊஞ்சலில் மகிழ்ச்சியுடன் படுத்துக்கொண்டு, விரல்களால் 'பீஸ் அவுட்' சைகை காட்டுவதாக உள்ளது.
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்
{{comments.comment}}