அயோத்தி விழாவுக்கு வாங்க.. ரஜினியை நேரில் அழைத்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள்!

Jan 02, 2024,03:27 PM IST
சென்னை: அயோத்தியில்  நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு வருமாறு கூறி நடிகர் ரஜினிகாந்த்துக்கு, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் அடங்கிய குழு நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்துள்ளது. 

உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ல் நடைபெற உள்ளது. ராமருக்கு 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜன்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு தீபாவளி பண்டிகை போலாகும். அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பொருட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு  அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி கும்பாபிஷே விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



தற்போது விஐபிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இறங்கியுள்ளனர். தமிழக முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி  உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நேரில் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த்துக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டனில்  உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற ஆர்.எஸ்.எஸ் தென் இந்திய அமைப்பாளர் செந்தில்குமார்,  தென் இந்திய மக்கள்  செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ்,  மாநில இணைச்செயலாளர்  (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர், மாநகர் பொறுப்பாளர் ராம்குமார் மற்றும்  பாஜக, சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர்  அழைப்பிதழை வழங்கினர்.

உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், மிகவும் பாக்கியமாகக் கருதுவதாகவும், எல்லாம் ஶ்ரீராமரின் அருள் எனவும் உணர்வுப்பூர்வமாக ரஜினிகாந்த்  கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அர்ஜூன மூர்த்தி போட்டுள்ள டிவீட்டில், எனது வாழ்நாளில் கிடைத்த அரும்பாக்கியமாக இன்றைய நிகழ்வு அமைந்தது என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார். அர்ஜூன மூர்த்தி பாஜகவிலிருந்து ரஜினிகாந்த் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்த "கட்சி"க்கு   நிர்வாகியாக வந்தவர். ஆனால் ரஜினிகாந்த் கடைசி வரை கட்சியை ஆரம்பிக்காமலேயே அதைக் கலைத்து விட்டதால் மீண்டும் பாஜகவிலேயே போய் இணைந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

news

26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!

news

ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!

news

திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

news

செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

news

நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

news

Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!

news

அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்