சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய.. ருதுராஜ் உருக்கமான பதிவு!

Apr 11, 2025,10:11 AM IST

சென்னை: லேசான எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடர் போட்டிகளிலிருந்து விலகி உள்ள ருதுராஜ் கெய்க்வாட் உருக்கமான பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.



நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில்  நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.


இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ராஜஸ்தான் ராயல் அணியுடன் மோதியது. அப்போது தேஜ் பாண்டேவின் பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு எதிர்பாராத விதமாக முழங்கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் விளையாடினார். ஆனால் அவரது வலியின் தீவிரம் அதிகமாக இருப்பதால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.




இந்த நிலையில்  எலும்பு முறிவு காரணமாக ருதுராஜ் கெய்க்வாட்  ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளவிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் தோனி அணியை வழிநடத்துவார் என அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. தோனி தலைமை ஏற்கும் இந்தப் போட்டி ரசிகர்களால் உற்று நோக்கப்படுகிறது.


இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பில் இருந்து விலகிய ருதுராஜ்  உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். 


அதில் லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.


 2025 ஆம் ஆண்டு 

ஐபிஎல் தொடர் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்