சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தின் போது கிடைத்த காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றின் விபத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி துவங்கி டிசம்பர்26ம் தேதி வரையிலான 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜையின் போது கோவிலுக்கு ரூ.297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது கிடைத்த வருமானத்தை விட ரூ.82 கோடி அதிகமாகுமாகும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ரூ.215 கோடி மட்டுமே வருமானமாக கிடைத்திருந்தது.
அதே போல் அரவணை பாயசம், அப்பம் போன்ற பிரசாத விற்பனை மூலமாக கிடைத்த வருமானமும் கடந்த ஆண்டை விட ரூ.22 கோடி அதிகம். மண்டல பூஜை காலத்தின் போது மொத்தமாக 32 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இத கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு மண்டல கால பூஜையின் போது 28 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்திருந்தனர் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 30ம் தேதி துவங்கி மகரவிளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 19 ம் தேதி மட்டுமே பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த பல புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தினசரி ஆன்லைன் புக்கிங் மூலம் வரும் 60,000 பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் 10,000 பக்தர்கள் என தினமும் 70,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனத்தின் மேலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் ஜனவரி 12ம் தேதி முதல் ஜனவரி 14 வரை தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}