திருவனந்தபுரம்: சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் நிலவி வருவதாலும், கூட்டம் அதிகரித்து வருவதாலும், ஜனவரி 10ம் தேதி முதல் ஸ்பார்ட் புக்கிங் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இது ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி 60 நாட்கள் நடைபெறும். இங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து 41 நாட்களாக சாமி தரிசனம் செய்து வந்தனர். வருடாந்திர மண்டல பூஜை கடந்த மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. வரும் 15ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இந்த மகரஜோதி விழாவிற்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதால் கோயில் நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவஸ்தனம் போர்டு செய்து வருகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ம் தேதி வரை ஆன்லைன் டிக்கெட் மூலம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜனவரி 14,15ம் தேதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு ஐம்பதாயிரம் ஆகவும், ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாட் புக்கிங் வரும் 10ம் தேதியுடன் நிறுத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பூஜை நிறைவடைந்த பின்னர் 20ம் தேதி காலை 7 மணிக்கு மீண்டும் நடை சாத்தப்படும் என்று தெரியப்படுத்தப்பட்டுள்ளது
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}