- ஸ்வர்ணலட்சுமி
மாசி மாதம் அமாவாசை வந்து விட்டாலே.. சேலத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் களை கட்டிக் காணப்படும். அங்கு நடைபெறும் மயான கொள்ளை மிகவும் பிரசித்தமானது. ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு கூடி அம்மனை வழிபடுவார்கள்.
பிப்ரவரி 27 ,2025 வியாழக்கிழமை ,மாசி மாத அமாவாசை நாளாகும். இந்த அமாவாசை நாளில் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் அங்காளம்மன் கோவிலில் மிகவும் பிரபலமானது.
இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி பொதுவாக அம்மன் கோயில்களுக்கு அருகில் உள்ள மயானங்களில் நடைபெறுவது முக்கிய சிறப்பம்சமாகும். இது அங்காளம்மன் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவும் மயானத்தின் சக்தி அடக்குவதாகவும் கருதப்படுகிறது. பக்தர்கள் அவரவர்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றும் ஒரு வழிபாடாகவும் கொண்டாடப்படுகிறது.
சேலம் டவுன் தேர் வீதி பெரிய அங்காளம்மன் கோவிலில் சாமி சிலைகள் அலங்காரம் செய்து சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் போன்று பல்வேறு சாமிகள் போல வேடமிட்டு மேளதாளம் முழங்க நடனம் ஆடுவர். இதுபோலவே ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள் அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவர்.
சேலம் டவுன் தேர் வீதி பெரிய அங்காளம்மன் கோவில் ,அம்மாபேட்டை அங்காளம்மன் கோவில், ஜான்சன் பேட்டை அங்காளம்மன் கோவில், வின்சென்ட் அங்காளம்மன் கோவில் ,நாராயண நகர் ஏரிக்கரை அங்காள பரமேஸ்வரி கோவில், கிச்சிபாளையம் அங்காள பரமேஸ்வரி கோவில், ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில் மற்றும் மாநகரில் உள்ள மாரியம்மன் ,காளியம்மன் கோவில்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் வருவது வழக்கம்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்னும் சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டே சுடுகாடு நோக்கி செல்வார்கள். அப்படி ஆடிக் கொண்டு வரும் சாமி ஆடிகள் பாதையில் பக்தர்கள் கீழே தரையில் படுத்து கொள்வார்கள் .அவர்கள் அதை தாண்டி வரும்பொழுது அவர்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமண தோஷம் இருப்பவர்கள், தீராத நோய் நொடிகள் இருப்பவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்போது ஆக்ரோஷத்துடன் ஆடும் பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்குவார். இதனைக் காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு களிப்பார்கள்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}