Samai Pongal and Ven Poosani paruppu sambar.. டேஸ்ட்டியான சாமை பொங்கல் + வெண்பூசணி பருப்பு சாம்பார்!

Dec 18, 2024,03:06 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: சிறு தானியங்களை இப்போது நமது வீடுகளில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது நல்ல விஷயம்தான். அந்த வகையில் நாமும் கூட இப்போது ஒரு சிறு தானிய உணவைத்தான் பார்க்கப் போகிறோம்.


அதாங்க சாமை பொங்கல்..எப்படி இதை செய்யலாம் என்பது குறித்துப் பார்ப்போம். நாளைக்கு செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்.. தொடர்ந்து பயன்படுத்துங்க. ஹெல்த்துக்கும் நல்லது.


தேவையான பொருட்கள் 




சாமை அரிசி - ஒரு கப் 

பாசிப்பருப்பு - ஒரு கப் (இரண்டையும் லேசாக வறுத்து கழுவிக் கொள்ளவும்)

சீரகம் - ஒரு ஸ்பூன்

மிளகு - ஒரு ஸ்பூன்

இஞ்சி அண்ட் பூண்டு - ஒரு ஸ்பூன் கட் செய்தது பொடியாக

நெய் -  2 ஸ்பூன்

கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

முந்திரி - 10

சாமை அண்ட் பாசிப்பருப்பு அதற்கு நான்கரை (அதாவது 4கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும் அளவுக்கு ஒரே கப் எடுத்துக் கொள்ளவும்


செய்முறை


1. சீரகம் மிளகு லேசாக வறுத்து கொண்டு அதில் சேர்க்கவும்

2. கருவேப்பிலை கொஞ்சம் சேர்க்கவும்

3. இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நான்கு விசில் விடவும் கமகம சாமை பொங்கல் ரெடி 

4. ஒரு கொதி வர வேண்டும்

5. குக்கரில் விசில் அடங்கியதும் நெய் ஊற்றி முந்திரி வறுத்து பொங்கல் உடன் சேர்க்கவும்


வெண்பூசணி சாம்பாருடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் நாளை சாம்பாருடைய ரெசிபி வரும்


பயன்கள்


1. எலும்புகளுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும்

2. எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பலன்

3. லிட்டில் மில்லட்னு இத சொல்லுவாங்க

4. இயற்கையான சுண்ணாம்பு சத்து இருக்கிறது

5. புரதச்சத்து கொழுப்புச்சத்து தாது உப்புகள் மக்னீசியம் சோடியம் மாவுச்சத்து கால்சியம் இரும்புச்சத்து நிறைந்தது

6. அதிக நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை அளவு சீராகும்

7. மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது

8. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

news

துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?

news

இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!

news

கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்