ஹைதராபாத் : மலையாளத்தை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை அறிக்கையையும் வெளியிட்டு, பாதுகாப்பான பணி சூழல் அமைத்து தர வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் நடிகை சமந்தா.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மை தான் என அம்பலப்படுத்தி இருந்தார். இதனையடுத்து மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலையாள நடிகைகள் பலரும் தாங்களும் இது போல் தொல்லைகளை அனுபவித்து பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார் அளிக்க துவங்கினர்.

நடிகர் பலர் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டதால் மலையாள நடிகர் சங்கமான அம்மா கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த பாலியல் புகார்களால் மலையாள திரையுலகில் பெரும் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை பாராட்டி நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முக்கிய பதிவு ஒன்றை வைத்துள்ளார். அதில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.
மலையாள சினிமாவை போல் தெலுங்கு திரையுலகிலும் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலமாக பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதேபோல நடிகை அமலாவும் கூட பாதுகாப்பான பணிச் சூழலை தெலங்கானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் சிலரும் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்காக குரல் கொடுத்து வருவதால் மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் இதே போன்ற பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}