சமந்தாவுக்கு 36 வயசாச்சு.. "ஹேப்பி பர்த்டே" சொல்லலாம்.. ஓடி வாங்க!

Apr 28, 2023,01:09 PM IST

சென்னை: நடிகை சமந்தா ரூத்பிரபு இன்று தனது 36வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சூப்பர் போஸ்ட் போட்டுள்ளார். ரசிகர்களும் சமந்தாவை ஊக்குவிக்கும் விதமாக வாழ்த்தியும், உங்களுக்கு நாங்க இருக்கோம் என்றும் பதில் கொடுத்து வருகின்றனர்.

தென்னக நடிகைகளில் சமந்தாவுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. வெகு வேகமாக ரசிகர்களை தன் பால் ஈர்த்தவர் இந்த க்யூட் சமந்தா. அதி வேகமாக வளர்ந்து வந்த அவர் அதே வேகத்தில் திருமணம் செய்து கொண்டபோது ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.. ஏன் அதுக்குள்ள என்று அவர்கள் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் விவாகரத்தும் முடிந்து விடவே.. ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.




அத்தோடு நிற்கவில்லை சோகம்.. சமந்தாவுக்கு உடல் நல பாதிப்பு என்று அடுத்த தகவல் வந்தது. இது அவரையும் வருத்தியது. தொடர் சிகிச்சைக்குப் பின்னர் தேறி வந்த சமந்தா தற்போது மீண்டும் நடிப்பில் அக்கறை காட்டி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான சாகுந்தலம் தோல்விப் படமானாலும் கூட அவர் மனசை விட்டு விடவில்லை. தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் சமந்தா. இதையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கலான செல்பி ஒன்றைப் போட்டுள்ளார். அதில்.. இந்த வருடம் எல்லாமே நல்லா இருக்கப் போகுது என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

நீங்களும் சமந்தாவுக்கு பர்த்டே விஷ் பண்ணிடுங்க!

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்