வித்தியாசமான வேடத்தில் சமுத்திரகனி.. "ராமம் ராகவம்".. பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ரிலீஸ் ஆனது..!

Jan 23, 2024,10:49 AM IST
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ராமம் ராகவம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கி உள்ளார். இவர் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் சமுத்திரக்கனியோடு இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.

இப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் ப்ருத்வி போலவரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்ய, அருண் சிலுவேறு இசையமைத்துள்ளார். இதில் மோக்ஷா, ஹரி உத்தமன், ப்ருத்வி, அஜய் கோஷ்,பிரமோதினி, லாவண்யா ரெட்டி, சித்ரம், ஸ்ரீனு மற்றும் ராக்கெட் ராகவா ஆகியோர் நடித்துள்ளனர்.



தற்போது தெலுங்கு திரை உலகில் பிஸியான  நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இந்த வேளையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ராமம் ராகவம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்பா,மகன் இடையே உள்ள உறவை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கில்  உருவான விமானம் திரைப்படத்தில் அப்பா மகன் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்திருந்தார் சமுத்திரக்கனி. தன் மகனின் ஆசையை ஒரு தந்தையாக எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் படம் உருவாகியிருந்தது. இப்படம் பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது. 

இந்நிலையில் தற்போது இதே போன்ற கதைக்களத்தில் இரு மொழிகளில் உருவாகும் ராமம் ராகவம் திரைப்படத்திலும்   நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது. மேலும் இப்படத்திற்கும் மக்களிடையே எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.  படப்பிடிப்பு ஹைதராபாத், ராஜமுந்திரி, சென்னை, தேனி, மதுரை, திண்டுக்கல்,போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஆன்லைனில் முன்பதிவு மூலம் டாஸ்மாக் மது விற்பனை : அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு

news

சிந்தனைச் சிதறல்.. முன்மதியையும் தற்காப்பையும் உமதாக்குவதில் உறுதியாய் இருங்கள்

news

செப்டம்பர் 8 வரை சட்டமன்றக் கூட்டம் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

news

பட்ஜெட் பூஜ்ஜியம்...மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

news

பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

news

தமிழக பட்ஜெ ட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்

news

சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா

news

திருநாவுக்கரசரை அசைத்துக் கூட பார்க்க முடியாத கொடும் விஷம்

news

முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்.. சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்

அதிகம் பார்க்கும் செய்திகள்