டெல்லி: பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுத்து விட்டது இந்தியா.. இனிமேல் நாடாளுமன்ற நிகழ்வுகள் புதிய நாடாளுமன்றத்தில்தான் நடைபெறும். இந்த நிலையில் பழைய நாடாளுன்றத்திற்குப் புதிய பெயர் சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
சம்விதான் சதன் என்று பழைய நாடாளுமன்றத்திற்குப் பெயர் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இந்த இந்திப் பெயருக்கு தமிழில் அர்த்தம் என்னவென்றால் அரசியல்சாசன கட்டடம் என்று பெயர் . 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழைய நாடாளுமன்றக் கட்டடம் மிகப் பெரும் வரலாறுகளை தன்னுள் வைத்துக் கொண்டு இன்னும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
இந்த பழைய நாடாளுமன்ற சென்டிரல் ஹாலில் இன்று கடைசி எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோதுதான் இந்தப் பெயரை அறிவித்தார்.
இந்த உரைக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து எம்.பிக்களும் புதிய நாடாளுமன்றத்திற்கு நடந்தே சென்றனர். இனிமேல் இந்திய நாடாளுமன்றம் புதிய கட்டடத்தில்தான் செயல்படும்.
சர் எட்வின் லூத்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகிய பிரிட்டிஷ் கட்டடக் கலை என்ஜீனியர்கள்தான் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தவர்கள். 1927ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. 96 வயதாகிறது இந்தக் கட்டடத்திற்கு என்பது குறிப்பிடத்தக்கது.
Santhi Sinnathambi Poem: விடுமுறைக்காகக் காத்திருந்தோம்.. காத்திருந்தோம்!
பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்
தமிழக பட்ஜெ ட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்
ஆடியிலே அலைமோதி ஆர்ப்பரிக்கும் காவிரியில்!
சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா
திருநாவுக்கரசரை அசைத்துக் கூட பார்க்க முடியாத கொடும் விஷம்
விவாகரத்தில் விம்மிய தாய் உள்ளம்
முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்.. சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}